அதிகாரம் 83. கூடா நட்பு CHAPTER 83. THE FRIENDSHIP THAT NOT TO BE JOINED 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖

அதிகாரம் 83.
கூடா நட்பு
CHAPTER 83.
THE FRIENDSHIP THAT NOT TO BE JOINED
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெளியுலகிற்கு நட்பாய் இருப்பது போல் காட்டி உள்ளுக்குள் வெறுப்புடன் பழகும் நட்பு, ஒரு பொருளை தாங்குவது போல் தாங்கி, அப்பொருளை வெட்ட தாங்கும் பட்டடை என்ற பொருளுக்கு ஒப்பானதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that shows happiness in out and keeping hatred inside is equallent to the thing that is used as the basement wood for cutting a thing.
MAHENDIRAN V
------------------
குறள் 822:
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இனிதாய் பழகுவதாக பாசாங்கு காட்டி உள்ளார்ந்து விரும்பாத நட்பு, பதுமைப்பெண் போல் அலங்கரித்து பாலியல் செய்யும் பெண்ணை போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that pretends like a pleasant manner and keeping worst aim inside is like the stance of a pretty woman who does the commercial lust work.
MAHENDIRAN V
------------------
குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன்கு கற்றுணர்ந்தோர் நட்பாய் பெற வாய்ப்பு கிட்டினால், அவர் கருத்தொற்றுமை இருந்தாலொழிய நட்பாய் தொடர்வது அரிது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is getting a well literated one as a friend, if there is no similar frequency between two, hardly to resume such friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகத்தில் பொலிவும் சிரிப்பும் காட்டி, உள்ளத்தில் வஞ்சனை குணம் இருந்தால், அவர் நட்பை பெற அஞ்சவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one behaves pleasantly as a friend but having hypocrisy inside as a trait, one has to be afraid of having him a friend.
MAHENDIRAN V
------------------
குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதளவில் ஒத்து வராதவரை அவர் எப்பேற்பட்டவராக இருந்தாலும், அவரை நம்பி ஒரு செயலில் இறங்குதல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no similar thoughts of one with a friend whom he is behaving and whoever he is, he shouldn't dare to do a work believing him.
MAHENDIRAN V
------------------
குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவர் போல் நடித்து அறிவுரை கூறி பழகும் நட்பு, பகைச் சொல் அவர் பேசும் பொழுது அவரது தன்மை வெளிப்பட்டு விடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The real face of a friendship that pretends like a good man and advising us would be known when such guy expresses illy thoughts.
MAHENDIRAN V
------------------
குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் வணக்கமாக பேசுவது, குறி வைத்து அம்பு எய்துவதற்கு வில் வலைவது போலாகும். ஆதலால் பகைவரின் அவ்வணக்கத்தை நம்பி விடகூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If an enemy is speaking with salutation, that is like a bow is bending more for shooting by an arrow. So, such poliet of the enemy shouldn't be believed at any situation.
MAHENDIRAN V
------------------
குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் கை கூப்பி வணங்கினாலும் கொலைக்கருவி அக்கைக்குள் ஒளிந்திருக்கும். பகைவர் விடும் கண்ணீரும் அப்படித்தான். தற்காப்புடன் இருந்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an enemy bows by closing palms, killing-weapon might be hidden inside. The tears of the enemy too are like that. Has to be defensive.
MAHENDIRAN V
------------------
குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பராய் சபையில் சிரித்து பேசி அகத்தில் வஞ்சம் கொண்டிருப்போரிடம், நாமும் அவ்வழியே சிரித்து மகிழ்ந்து நட்பை தொடர்ந்து, பழி பெறாதிருந்து நட்பை நலிவடைய செய்யவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
We too go ahead on the same way with the friend who pretends like a good friend and speaking prides of us to others on stage, and have to make such friendship slowly invalid.
MAHENDIRAN V
------------------
குறள் 830:
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் நட்பு பாராட்டவருங்கால், நாம் மரியாதை நிமித்தம் புறத்தில் மகிழ்ச்சி காட்டி, உண்மைத்தன்மை அறியும்வரை அகத்தில் பகையை மறக்காமல் வைத்திருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
When the enemy wants to make  friendship with us, we should rejoice on the outside for the sake of respect and keep the hatred on the inside until knowing the truthfulness.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS