திருக்குறள். அதிகாரம் 87. பகை மாட்சி CHAPTER 87. HOSTILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 87.
பகை மாட்சி
CHAPTER 87.
HOSTILITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வலியாரை எதிர்த்தலை தவிர்ப்பது நலம். என்றாலும், எளியார் எதிர்க்கும்கால் எதிர்ப்பது நலம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is better to avoid to oppose the strong ones. However, it is better to oppose weak ones if they wish to oppose.
- MAHENDIRAN V
------------------
குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களின் அன்பும் இல்லை, அரவணைக்க துணையும் இல்லை, வலிமையான படையும் இல்லை- இவ்வரசன் ஆற்றல் மிக்க எதிரியை வீழ்த்துவது அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no love of the people, no support to comfort, no strong army- it is rare for this king to defeat a powerful enemy.
- MAHENDIRAN V
------------------
குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அச்சம் மிகுதி, அறிவு இல்லை, அன்பும் இல்லை பண்பும் இல்லை, ஈகையும் இல்லை. - இவ்வரசன் எதிரியிடம் வீழ்ந்துவிடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Having fear a lot, ignorant, no  love from people, no good character, no helping tendancy to people. - This king will fall to the enemy.
- MAHENDIRAN V
------------------
குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சினம் தவிர்க்க தெரியாத, மனத்தை கட்டுப்படுத்த தெரியாத அரசனை எந்நேரத்திலும், யாராலும்  வீழ்த்துவது எளிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is easy for anyone, at any time, to overthrow a king who doesn't control his anger and doesn't know how to balance his mind.
- MAHENDIRAN V
------------------
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பழி மட்டும் நிறைந்திருந்து, நற்பண்பும் இல்லாது, நல்வழியில் செல்லாத அரசனை வீழ்த்துவதை இனிய தருணமாக கருதுவான் பகைவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy would consider that it is a happy moment to overthrow a king who is full of crimes and without virtue and does not go in the right direction.
- MAHENDIRAN V
------------------
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அளவற்ற சினம் கொண்டு, மிகுதியாய் பேராசை பிடித்து ஆளும் அரசனை எதிர்கொள்ள, எதிரி விரும்பி செயல்படுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy would act willingly to confront the ruling king who has an infinite anger and excessive greed.
- MAHENDIRAN V
------------------
குறள் 867:
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடவே இருந்து ஒவ்வாத வினை செய்து அழிவுக்கு வழிவகுக்கும் ஒருவனை பொருளழித்தாவது பகைவனாக்கிக்கொள்ள வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even by losing cost, one must make the enemy the one who causes the opposite reaction and leads to destruction being beside.
- MAHENDIRAN V
------------------
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குணம் கெட்டுப் போய் குற்றமும் பல புரிந்தவன், துணையின்றி தவிப்பான். ஆகையால் எதிரியிடம் அவன் ஏமாந்து நாட்டை இழப்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who has lost his good trait and committed many crimes, will suffer without co-operation from people. Therefore he would be very much disappointed by the enemy and would lose the nation.
- MAHENDIRAN V
------------------
குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அஞ்சும் குணமும் அறிவற்ற நிலையிலும் இருக்கும் அரசனை வீழ்த்தும் பகைவன், போரில் ஆனந்தம் காண்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy who overthrows the king who is fearful and ignorant would find joy in battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்தவர் தவறு செய்தாலும், பழகிய நட்பின் இலக்கணமாய் அன்பு கொண்டவராயிருந்தால், பகைவனால் பாராட்டப்படுவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If he who left from one makes a mistake but has intensively love with him from whom he left would be appreciated by the one.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS