அதிகாரம் 84. பேதைமை CHAPTER 84. THE STANCE OF IGNORANCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 84.
பேதைமை 
CHAPTER 84.
THE STANCE OF IGNORANCE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வருவாயை விட்டு விட்டு வராததை தேடி அலைவதே அறியாமை எனப்படுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Instead of looking for the sources of revenue, searching for something for uncoming one is known as stupidness.
- MAHENDIRAN V
------------------
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தனக்கு ஒவ்வாத/தன்னால் செய்ய இயலாத  விஷயங்களில் கவனம் செலுத்தி நேரம் செலவழிப்பதே அறியாமையிலும் அறியாமை ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Doing an act that is completely apart from one's skill or doing an inappropriate act and wasting the time is the prime ignorance of ignorance.
- MAHENDIRAN V
------------------
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெட்கப்பட வேண்டிய விஷயங்களுக்கு வெட்கப்படாமலிருத்தல், விரும்பியவற்றை நாடாதிருத்தல், அன்பு என்றால் என்ன என்று அறியாதிருத்தல், காக்க வேண்டியவற்றை காத்துக்கொள்ள தவறுதல்-இவையே அறியாமையின் சிறப்பியல்புகள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What the principles of ignorance are, 'Being not to shy for an act for what one must shy; Being not to be trying to get one on which one is interested; The stance of not knowing the meaning of kindness, and the stance of failing to protect one which must be protected.
- MAHENDIRAN V
------------------
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நூல்கள் நிறைய படிப்பர்; அதன் பொருள்களையும் அறிவர்; பிறருக்கும் அறிவுரை கூறுவர்; ஆனால் தன் வாழ்க்கையில் அதை கடைபிடிக்க மாட்டார்- இவரை போல பேதையர் (அறிவிலி) உலகில் வேறு யாரும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One would be well literate by reading books a lot; he would be good in meanings; would advise to others; but would not follow those principles in his life. - Can you see any other ignorance as he is?
- MAHENDIRAN V
------------------
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவற்ற செயல் செய்வோர்க்கு, இப்பிறப்பு என்றில்லை, ஏழு பிறவி எடுத்தாலும் அதன் துன்பத்தின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To those who do ignorant activities, misery would be tending not only in this birth but also in his seven births.
- MAHENDIRAN V
------------------
குறள் 836:
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த வழி எதுவென அறியாது செயலாற்ற துவங்குபவனின் செயலும் பாழாகும் அவனும் கெடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who starts a work without knowing which is the best way to do would be spoiled, also his work would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவிலாதோர் திரட்டும் செல்வம் சம்மந்தமில்லாதவர்களால் அனுபவிக்கப்படுமானால், அவன் உற்றாரும் உறவினரும் வருந்தி அழுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When the wealth earned by an ignorant man is enjoyed by anonymous, the relative circle of the ignorant person would be worried out and crying.
- MAHENDIRAN V
------------------
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேதையின் கையில் ஒரு அரும்பொருள் கிட்டிவிட்டால்,  அதை பயன்படுத்தும் அறிவு இல்லாததனால், கள் உண்ட பித்தன் போல் கூத்தாடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If an enormous wealth or thing is found to an ignorant guy, since he doesn't know how to utilise it, he would be jumping from the earth to sky like a drunken mad person.
- MAHENDIRAN V
------------------
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவற்றவர்களுடன் நட்பு பெறும் சூழ்நிலை துன்பமேதும் தராது என்றாலும், இழப்பதனால் இன்பம் ஒன்றும் பறிபோய்விடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though no misery would tend if one makes an ignorant as a friend, no pleasance would go away if one quits him from friendship.
- MAHENDIRAN V
------------------
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மெத்த படித்த சான்றோர் கூடத்தில் பேதை ஒருவன் நுழைவதென்பது, கழுவாத காலுடன் படுக்கையில் ஒருவன் நடப்பது போன்றதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of ignorant person's entering into the domain of literate people is equallent to a guy is walking on the bed without washing the feet.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS