அதிகாரம் 85. புல்லறிவாண்மை Chapter 85. THE STANCES OF FOLLYNESS (IGNORANCE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 85.
புல்லறிவாண்மை
Chapter 85.
THE STANCES OF FOLLYNESS (IGNORANCE)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உலகிலேயே பெரிய இல்லாமை என்பது அறிவில்லாமை தான். அறியாமையை மிஞ்சிய இல்லாமை எதுவும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The greatest lackness in the world is of course ignorance. There is nothing lacking beyond ignorance.
- MAHENDIRAN V
------------------
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவில்லாதவன் தரும் கொடை சிறப்பிற்குரியது அதை பெருபவன் பெறும் பேறு பெற்றவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The prise given by the ignorant is special one. And the one who receives it is the one who has done penance.
- MAHENDIRAN V
------------------
குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவில்லாதவன் தான் தன்னைத்தானே வன்மையாக துன்புறுத்திக்கொள்வான். பகைவன் கூட அவ்வாறு அவனை துன்புறுத்த முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only ignorant would persecute himself severely. Even the enemy too cannot persecute him in such a way.
- MAHENDIRAN V
------------------
குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெண்மையின் (அறிவின்மையின்) உள் அர்த்தம் என்னவென்றால், தனக்குத்தானே தன்னை அறிவாளி என்று பீற்றிக்கொள்வதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The actuy meaning of ignorance is to praise oneself very much proudly as intelligent.
- MAHENDIRAN V
------------------
குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கல்லாததை கற்றது போல் நடிப்பர் அறிவிலார். போதாதென்று, அரைகுறையாக கற்றவைகளிலும் வீணான சந்தேகத்தை கிளப்பிவிடுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ignorant would pretend that he has learned a lot. Moreover, he would raise doubts unnecessarily from his little learned.
- MAHENDIRAN V
------------------
குறள் 846:
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் என்று அறிந்த பின்பும் அதை நீக்கா தன்மை, உடலை மறைக்க உடை உடுத்துவதற்கு முரணானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if knowing that it is wrong and being not to try to remove such wrong is contrary to wearing clothes to cover the body.
- MAHENDIRAN V
------------------
குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடையவர்களின் கூற்றை ஏற்று நடக்காத அறிவிலியின் செயல், தனக்கு தானே துன்பத்தை தேடிக் கொள்வதற்கு சமமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The act of ignorance that does not accept the sayings of the wise is equallent to seeking misery for oneself.
- MAHENDIRAN V
------------------
குறள் 848:
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தானும் திருந்தாது, பிறர் கூறும் நற்கூற்றுகளையும் ஏற்க தயங்கும் அறிவிலாதவன் உயிர்விடும்வரை நோயை பெற்றவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
An ignorant person who does not change himself and refuses to accept the good doctrines (advices) of others is a person who gets sick till he dies.
- MAHENDIRAN V
------------------
குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுள்ளவனை அறிவற்றவன் என்பதோடல்லாமல், தான் தான் அறிவுள்ளவன் என்று வாதிடுவான் அறிவற்றவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ignorant would not only argue a wise is ignorant but also he would strongly argue that only he is wiser than any other.
- MAHENDIRAN V
------------------
குறள் 850:
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இருக்கிறது என்று உலகமே அறிந்த பின்பும் அது இல்லை என்று வாதிடும் அறிவற்றவன் பேய்க்கு சமமானவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When even the world says a thing is existing, If an Ignorant guy strongly argues that is not existing, he is equallent to demon.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS