திருக்குறள். அதிகாரம் 86. இகல் Chapter 86. HATING CHARACTERISTIC 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 86.
இகல்
Chapter 86.
HATING CHARACTERISTIC
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எல்லா உயிர்களையும் சமமாக கருதாத  பண்பு ஒரு தீய குணமாகும். மனித உயிர்க்கு மற்ற உயிர்கள் மாறுபட்டது என்பது இகல் ஆகும். இது ஒரு வஞ்சனை குணமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The characteristic of not treating all living things equally is an evil trait.  This type of character means that human life is different from other living things. This is a kind of is a treacherous characteristic.
- MAHENDIRAN V
------------------
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தம் கருத்தோடு ஒவ்வாத ஒரு வினையை ஒருவர் செய்யுங்கால், அவ்வேற்றுமையை கருதி அவருக்கு துன்பம் தருதல் கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one commits an act contrarily to our own opinion, we should not make misery to him by means of different opinion.
- MAHENDIRAN V
------------------
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் மாறுபட்ட கருத்தை உடையவராதலால் அவர் மீது வெறுப்பு காட்டும் புத்தியை ஒருவர் அகற்றிவிட்டால் அவரின் புகழ் கூடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a person gives up the mind that hates one because of his different opinion, the person's reputation would raise up.
- MAHENDIRAN V
------------------
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவருக்கு அடுத்தவர் மீது காட்டும் வெறுப்பே பெருந்துன்பமாகும். அத்துன்பத்தை நீக்கிவிட்டால், ஈடில்லா இன்பம் வந்துசேரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big suffering is the hatred of one person over another. If such suffering is removed from the mind, pleasure will cummulate immeasurably.
- MAHENDIRAN V
------------------
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் மீது வெறுப்பை உமிழாமல் சாய்ந்தொழுகும் பண்பை பெற்று விட்டால், வல்லோரையும் வெல்வராகிவிடுவார் அவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one acquires the habit of leaning on someone's thoughts (but it should be the right one) without spitting hatred on another, he will become a winner over the world.
- MAHENDIRAN V
------------------
குறள் 856:
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மாறுபட்ட கருத்துடையவரிடம் வெறுப்புடன் வாழ்ந்து வென்றுவிடலாம் என்று எண்ணி வாழ்பவரின் வாழ்க்கை விரைவிலேயே கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The life of a person who thinks that he can live and win with hatred towards a person who has different opinion will soon be ruined. (This matter is depending upon the good quality of the opinion the other person)
- MAHENDIRAN V
------------------
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையுணர்வும் வெறுப்பும் கொண்டோர், அதை விட்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்கிற நீதியை அறியாதவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have hatred and enmity are ignorant of the justice that can only succeed in life if it is left out.
- MAHENDIRAN V
------------------
குறள் 858:
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெறுப்பு உமிழ்ந்து வாழும் பண்பிற்கு எதிராக நடப்பது இனிமைக்கு வழிவகுக்கும். இல்லை, அதுவே சரியென்று வாழ்வோரின் வாழ்வு கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living against the habit of spewing hatred can lead to sweetness. The life of one being against this said principle would be collapsed soon.
- MAHENDIRAN V
------------------
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆக்கம் நிறைந்து வாழ்பவர் இகல் பண்பை நோக்க மாட்டார். மாறாராக இகல் பண்பை அனைத்துக்கொண்டால், துன்பத்தை வரவேற்கிறார் என்றர்த்தம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The one who lives full of creation will not look at the character of hatred. On the contrary, if he looks at the same, that means that he welcomes suffering himself.
- MAHENDIRAN V
------------------
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இகல் எனும் பகையுணர்வு வாழ்க்கை, அல்லலுக்கு வழிவகுக்கும். இகல் இல்லாத வாழ்க்கை புகழ் எனும் பெருமை தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The life of the one having hating characteristic will lead one to misery full life. Life without such illy character gives glory and  fame.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS