தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அதிகாரம் 18 வெஃகாமை Chapter 18 Stand of non-greedness விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
அதிகாரம் 18
வெஃகாமை
Chapter 18
Stand of non-greedness
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன்.
(Explanation in Tamil and English is written by Mahendiran.V)
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
விளக்கவுரை :
அநீதியாக அடுத்தவரின் பொருளை அபகரிப்பவருக்கு அழிவு வரும். குற்றமும் பெருகும்.
Explanation in English:
One who possesses other's property injusticiously would be destroyed, and crime would hike up.
-------------------------------------
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
விளக்கவுரை :
அடுத்தவரின் பொருளை அபகரித்தால் பழி வந்துசேரும் என்று அறிந்து
நீதிக்கு பயப்படுபவர் அப்படி செய்யமாட்டார்.
Explanation in English:
Justicious person wouldn't desire for other's property since he knows that it's a big sin.
-------------------------------------
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
விளக்கவுரை :
நல்வழியில் பணம் ஈட்டும் நல்லோர் அநீதி வழியில் அடுத்தோர் பொருட்களை அபகரிக்க விரும்பமாட்டார்கள்.
Explanation in English:
Those who earn by virtual ways wouldn't desire to take others' properties.
-------------------------------------
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
விளக்கவுரை :
கடுமையான வறுமையிலும்கூட, ஐம்புலன்களை அடக்கியாளும் நல்லோர் அடுத்தோரின் உடைமைகளுக்கு ஆசைப்படமாட்டார்கள்.
Explanation in English:
Even though being severe poverty, moralitisers who defeat five senses of organs wouldn't desire others' assets.
-------------------------------------
குறள் 175:
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
விளக்கவுரை :
பிறர் பொருளுக்கு ஆசைப்படும் தன்மை நுணுக்கமான அறிவுள்ளோரின் செயல்பாடாகாது.
Explanation in English:
Willing to take others' assets wouldn't be the habit of previous knowledgeable persons.
-------------------------------------
குறள் 176:
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
விளக்கவுரை :
கடவுளின் அருள் வேண்டி நின்று, பிறரின் பொருட்களை அபகரிக்க நினைப்பவன் வாழ்க்கை கெட்டுப்போகும்.
Explanation in English:
One who prays to God one side, but wills to possess others' things will surely get evil life.
-------------------------------------
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
விளக்கவுரை :
பிறர் பொருளை அபகரித்து எத்தனை இன்பம் கண்டாலும் அது துன்பத்திற்கான வழி.
Explanation in English:
Being joyful by crobbing others' belongings is the way for illy stance.
-------------------------------------
குறள் 178:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
விளக்கவுரை :
அடுத்தோர் உடைமைகளை அபகரிக்க நினைக்காமலிருந்தால் தான் இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கும்.
Explanation in English:
If one wants to protect his existing wealth he should never will on other's belongings.
-------------------------------------
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
விளக்கவுரை :
பிறர் உடைமைக்கு ஆசைப்படாமல் அறநெறியில் வாழ்வோர்க்கு திருமகள் தானாக வந்து அருள்புரிவாள்.
Explanation in English:
The god of wealth 'Thirumagal' will grace herself visiting to ones who live virtually without desiring others' properties.
-------------------------------------
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
விளக்கவுரை :
விளைவு அறியாது பிறருடைமைக்கு ஆசைப்படுபவருக்கு சோகம் தான் மிஞ்சும். அவ்வாறு ஆசைப்படாதோரின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
Explanation in English:
Ones who desire others' belongings unthinking the effects will meet saddened stand. Unwillers of other's things will live fabulously.
-------------------------------------
Explanation in Tamil and English
written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.