அதிகாரம் 21 தீவினையச்சம் CHAPTER 21 FEAR TO DO EVILS தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

 அதிகாரம் 21 

தீவினையச்சம்
CHAPTER 21 
FEAR TO DO EVILS

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன்.
(Explanation in Tamil and English is written by Mahendiran.V)

குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

விளக்கவுரை:
தீயோர் தீமையை மட்டுமே குணமாக கொண்டிருப்பதால் தீயசெயல்களை செய்ய அஞ்சமாட்டார்கள். மனிதாபிமானிகள் அப்படி செய்ய அஞ்சுவர்.

Explanation in English:
Evil guys wouldn't be afraid of doing illy activities as it is their trait. But who have humane would be afraid of doing so.
---------------------------------
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

விளக்கவுரை:
தீமை செயல்கள் தீயை காட்டிலும் அதீத பயத்தை தரவல்லவை என்றெண்ணி தீமைகள் செய்ய அஞ்சவேண்டும்.

Explanation in English:
Evils are more dangerous than fire. Thinking so, one should fear to do illy things.
---------------------------------
குறள் 203:
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்

விளக்கவுரை:
தீமை செய்தோருக்கு பழிக்கு பழியாக தீமை செய்யாமல் இருப்பதே பேரறிவு.

Explanation in English:
The immense knowledge is that not to doing evil as a revenge to one who might have done evil earlier.
---------------------------------
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

விளக்கவுரை:
பிறக்கு தீமை செய்ய கிஞ்சித்தும் எண்ணக்கூடாது. மறந்தும் ஒருவேளை தீமை செய்தால் அறம் அவனுக்கு கேடு விளைவிக்கும்.

Explanation in English:
One should not even imagine to doing evil to others. Incase of doing so, morality would punish severely.
---------------------------------
குறள் 205:
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து

விளக்கவுரை:
ஏதும் இல்லை எனும் வறுமையை காட்டி தீமைகள் செய்பவன் மென்மேலும் வறுமை வந்துசேரும்.

Explanation in English:
If one does illy things by showing reason of being poverty, poverty would cummulate on him more and more.
---------------------------------
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

விளக்கவுரை:
தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பவன் பிறர்க்கு தீமைகள் செய்யாதிருக்கவேண்டும்.

Explanation in English:
If one wants not to meet difficulties in life, he ought not to do any illy things to others.
---------------------------------
குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்

விளக்கவுரை:
ஒருவன் கொடும் பகை எதையும் கூட எதிர்கொண்டுவிடலாம். ஆனால் அவன் செய்யும் தீமைகளால் ஏற்படும் பகை அவனை அழித்துவிடும்.

Explanation in English:
One can be opposing any kind of big eneminess but not stand against the effects caused by his doing evil things. It would destroy him.
---------------------------------
குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று

விளக்கவுரை:
ஒருவன் செய்த தீய செயல்கள் அவனை நிழல்போல் தொடர்ந்து அவனை கெட வைக்கும்

Explanation in English:
Surely one's evils done to others would follow him like a shadow and would destroy him.
---------------------------------
குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்

விளக்கவுரை:
ஒருவன் தன் வாழ்க்கையை நேசித்து அனுபவிக்க ஆசைப்படுபவன் பிறர்க்கு துன்பம் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும்.

Explanation in English:
One who wills to joyfully live in his life should never even to think to do bad affairs to others.
---------------------------------
குறள் 210:
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

விளக்கவுரை:
பிறர்க்கு தீமைகள் செய்யாது வாழ்பவனின் வாழ்க்கையில் தீமைகள் ஒரு போதும் அண்டாது.

Explanation in English:
Evils would never near to one who lives without doing evils to others.
---------------------------------
Explanation in Tamil and English
written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)

Comments

Popular posts from this blog

Need our seminar programme at your college?