அதிகாரம் 26 திருக்குறள் புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 26 

புலால் மறுத்தல் CHAPTER 26
TO AVOID EATING FLESHES/MEAT

(Explanation in Tamil and English written by Mahendiran V)
தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-----------------------------
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

விளக்கவுரை:
இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்?

Explanation in English:
How can one be merciful if he grows his body by killing other living beings?
-----------------------------
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

விளக்கவுரை:
புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும்.

Explanation in English:
Though one is having infinite wealth, if he eats meat, he is known as graceless fellow.
-----------------------------
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்

விளக்கவுரை:
புலால் சுவை அறிந்தவன், தீமை வழிக்காக படை கொண்டு எச்செயலையும் செய்பவனுக்கு சமமானவன்.

Explanation in English:
One who tastes meat and flesh is a person like a person who has troops for collapsing by illy ways.
-----------------------------
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

விளக்கவுரை:
பிற ஜீவராசிகளின் உயிரை பரித்தல் அருள் இல்லை. அப்படி பரிப்பவர்கள் கருணையற்றவர்கள். அதிலும் புலால் புசித்தல் அர்த்தமற்ற செயல்.

Explanation in English:
Killing other living beings is graceless activity and merciless characteristic. More over, eating meat is sinful.
-----------------------------
குறள் 255:
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

விளக்கவுரை:
புலால் உண்ணாதிருத்தலே உயர்நிலை. தவறுபவர்கள் நரகத்தின் வாயிலுக்கு செல்கிறார்கள் என்று பொருள். நரகம் அவர்களை கவ்விகொள்ளும்.

Explanation in English:
The status of not eating flesh is the highest grace. Failing which would go to the gate of hell. The hell would crawl them.
-----------------------------
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

விளக்கவுரை:
உண்பதற்காக உயிர்வதை செய்யாமலிருந்தால் புலால் கிடைக்காத நிலை ஏற்படும். புலால் உண்ணும் வழக்கமும் இல்லாமல் போகும்.

Explanation in English:
If there is no slautering living beings (catle), none can avail meat, and habit of eating meet wouldn't exist.
-----------------------------
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

விளக்கவுரை:
புலால் இன்னொரு உயிரின் ரணம் என்றறிந்தவர்கள் புலால் உண்ணமாட்டார்கள்.

Explanation in English:
One who knows that meat is the hurt of another living being would not eat it.
-----------------------------
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

விளக்கவுரை:
குற்றமில்லா நெஞ்சுடையார் உயிர் பிரிந்த உடலை உண்ணமாட்டார்கள்.

Explanation in English:
One who is crimeless hearted characteristic would never eat the meat that is a derived one from a soul.
-----------------------------
குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

விளக்கவுரை:
ஓர் உயிரை கொல்லாதிருத்தல் ஆயிரம் வேள்விகள் (யாகங்கள்) செய்ததற்கு சமமானதாகும்.

Explanation in English:
The stance of not killing a living being is equallent to perform thousands of spiritual disciplines.
-----------------------------
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

விளக்கவுரை:
எவ்வுயிரையும் கொல்லாதிருப்போரை அனைத்து உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

All living beings would pray ones who don't kill any living being for any reason.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS