அதிகாரம் 19 புறங்கூறாமை CHAPTER 19 No back biting (Not to accuse one's behind) தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

அதிகாரம் 19 புறங்கூறாமை

CHAPTER 19 No back biting (Not to accuse one's behind)

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்.

விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன்.

(Explanation in Tamil and English is written by Mahendiran.V)

குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

விளக்கவுரை :
ஒருவர் அறம் செய்யாவிட்டால்கூட பரவாயில்லை. பிறர் இல்லாத சமயத்தில் அவர் பற்றி இழி கருத்து கூறாமல் இருப்பதே ஒரு அறம்.

Explanation in English:
Not to talking worst about one when he is not present is a greater morality than doing morality in life.
----------------------------------
குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

விளக்கவுரை :
அறம் செய்யாதது கூட ஒரு பெரும் பிழை இல்லை. ஒருவர் இல்லா சமயத்தில் பழி பேச்சு பேசி நேரில் இனிப்பாய் சிரிப்பது இழிசெயல்.

Explanation in English:
Even Immoral behaviour too is not a big sin but talking worst about one's behind to others and smiling at him is unpardonable illy habit.
----------------------------------
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

விளக்கவுரை :
புறம்பேசி வாழ்வாங்குவாழ்வதைக் காட்டிலும் செத்துப் போகுதல் கூட ஒரு அறமே.

Explanation in English:
Rather dying is honest than living with fame by speaking worst when one is absent.
----------------------------------
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

விளக்கவுரை :
ஒருவர் இல்லா சமயத்தில் புறம் பேசி மகிழ்வதை விட முகத்தில் அடித்தாற்போல் நேரில் கடுஞ்சொற்களால் பேசுவது எவ்வளவோ மேல்.

Explanation in English:
Speaking about one with harsh words in person is far better than speaking worst when one is absent.
----------------------------------
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

விளக்கவுரை :
ஒருவன் எவ்வளவு அறம் செய்து வாழ்ந்தாலும் அவன் புறம்பேசுபவனாக இருந்தால் அவனது அறம் அனைத்தும் பொய்த்து போகும்.

Explanation in English:
Even if one is living by doing morality a lot, if he speaks worse about one when one is absent, his virtuality would disappear.
----------------------------------
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

விளக்கவுரை :
ஒருவரை பழித்து பிறரிடம் பேசுபவன் நிச்சயம் பிறரால் பழித்து பேசப்படுவான்.

Explanation in English:
One who talks worst about one behind would surely be talked by others worst.
----------------------------------
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

விளக்கவுரை :
ஒருவரை பற்றி நல்லவற்றை கூறி நட்பை வளர்க்காது பழிசொல் கூறி நட்பை பிரிப்பது நயவஞ்சகத்தனம்.

Explanation in English:
It is illy manner what one is separating friendship by saying worst about one instead of talking betterments of one.
----------------------------------
குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

விளக்கவுரை :
நட்புக்குறியவரையே பற்றி புறம்பேசும் பேசும் ஒருவர், அயலாரை பற்றி புறம்பேசுவதை சொல்லவும் வேண்டுமோ?

Explanation in English:
While one is speaking worst about a closed friend, need we say how he would talk about stranger?
----------------------------------
குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

விளக்கவுரை :
இந்த பூமி, தான் அறம் தழுவாதிருக்கவேண்டும் என்பதற்காகதான் புறம்பேசுபவனையும் சுமந்து வருகிறது.

Explanation in English:
Only for protecting its moral duty, the Earth is carrying the back biters (them who speak worst behind of one)
----------------------------------
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

விளக்கவுரை :
பிறரின் குற்றத்தை கண்டு களிப்பதற்கு முன் தன் குற்றம் எது என்று அறிந்து வாழ்பவனின் வாழ்க்கையில் தீங்கு வராது.

Explanation in English:
The life of one who accuses himself for his crimes before accusing others will never get evils.
-------------------------------------
Explanation in Tamil and English
written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS