அதிகாரம் 22. ஒப்புரவறிதல். (HELPING TENDENCY.) திருக்குறள். விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் Written by Mahendiran V

அதிகாரம் 22 

ஒப்புரவறிதல்

CHAPTER 22
HELPING TENDENCY 

Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

விளக்கவுரை:
மழை எப்படி எந்த பிரதிபலனும் எதிர்பாராது புவிக்கு நீரை தருகிறதோ அதுபோல ஒருவர் செய்யும் உதவி, கைமாறு எதிர்பார்த்து செய்தல் கூடாது.

Explanation in English:
As if rain provides water to the earth without expecting any compensation, one's help should be so.
-----------------------------------
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கவுரை:
உழைத்து சம்பாதிப்பவர்கள் ஈட்டிய பணத்தை உழைக்க இயலாமல் போவோர்க்கு கொடுத்து உதவுவதே பேருதவியாகும்.

Explanation in English:
The stance of helping money earned by one's hard work to unables is the greatest help.
-----------------------------------
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

விளக்கவுரை:
உழைக்க இயலதாவர்களுக்கு தன் உழைப்பால் பலன் எதிர்பாராது கொடுத்து உதவும் மாண்பு மிக்கவர்கள் தேவலோகத்தில் கூட காண்பதற்கு அரிதானவர்கள்.

Explanation in English:
Those who help by their hard work and without any gain to ones who are unable to work are great. They are equqllent to God.
-----------------------------------
குறள் 214:
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

விளக்கவுரை:
உழைக்க இயலாதோர்க்கு கொடுத்து உதவுவர்களே உயிர்வாழ தகுதியுள்ளவர்கள்.மற்றோர் இறந்தோர்க்கு சமம்.

Explanation in English:
Ones who help to who are unable to work and earn due to their inability are eligible to have live, others are equallent to be dead.
-----------------------------------
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

விளக்கவுரை:
தன் சம்பாதித்யம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற மனப்பான்மையுடைவர்கள், உயிர்வாழ ஊர் உலகிற்கு பயன்படும் நீர் நிலைகளுக்கு ஒப்பானவர்கள்.

Explanation in English:
Ones who think that their earnings should be useful to all are equallent to the water sources that are factors for all living beings to live.
-----------------------------------
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

விளக்கவுரை:
உதவும் மனப்பான்மை உள்ள நல்ல மனிதர்களிடம் செல்வம் குவிவது, மரங்களில் பழங்கள் பழுத்து நிறைந்திருப்பதற்கு ஒப்பாகும்.

Explanation in English:
The stance of cummulating wealth to aiding persons is as if trees are having ripped fruits a lot.
-----------------------------------
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

விளக்கவுரை:
நல் மனிதர்களிடம் செல்வம் நிறைந்திருந்து, அனைவருக்கும் பயன்படுமேயானால், மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருந்தாக பயன்படுவது போலாகும்.

Explanation in English:
Richers' having a lot of money is like trees are used as medicines by its all organs.
-----------------------------------
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்

விளக்கவுரை:
உதவி செய்தே வாழ்ந்து பழகிப்போனவர்கள், தங்களால் இயலாத காலத்திலும் கடன் பெற்றாவது உதவி செய்வர்.

Explanation in English:
Richers who are habitually helping to others would be helping by borrowing incase of standing with poverty.
-----------------------------------
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு

விளக்கவுரை:
செல்வம் மிகுந்தவர் வறுமையடைந்தால், அவர் வருந்துவது எதற்காக என்றால், பிறருக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணுவதுதான்.

Explanation in English:
If rich men supposed to be loss and meet poverty since they  helped to inabilities, they would be worried out only for the reason that they aren't able to help to others.
-----------------------------------
குறள் 220:
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

விளக்கவுரை:
நல்லதொரு செல்வந்தன் அடுத்தோர்க்கு அள்ளி கொடுப்பதால் தீமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் தன்னை விற்றாவது அத்தீமையை எதிர்கொள்வான்.

Explanation in English:
If a good rich man meets evils because of his infinite helps to others, he would tackle such evils by mortgaging himself.
-----------------------------------

Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS