திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 90.
பெரியாரைப் பிழையாமை
CHAPTER 90.
NOT TO BLAME PERSONS THE GREAT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great.
- MAHENDIRAN V
------------------
குறள் 892:
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவிற் சிறந்த பெரியோரை மதித்து வணங்காவிடின், அப்பெரியோர்களாலேயே மதியார்க்கு துன்பம் வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's must to respect and obey the rythotrical scholars. If not, would cause miseries a lot to them from the scholars at any way.
- MAHENDIRAN V
------------------
குறள் 893:
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையை அழிக்கும் வல்லவரை பழித்து பேசுபவன், நீதி நூல்களுக்கு புறம்பாக நடந்து கொள்கிறான் என்றர்த்தம். தன் அழிவை அவனே தேடிக் கொள்கிறான் என்றும் அர்த்தம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one blames the ones who do powerfully some acts against enemity, it means that he goes against the principles of matters written in the epics. Also it means that he earns destruction for himself.
- MAHENDIRAN V
------------------
குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மூன்று வகை திறமும் படைத்த வலியோர்க்கு வலிமையில்லாதோர் தீங்கு செய்தால், தனக்கான தீமையை தானே தேடிக் கொள்பவராவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the weak persons do harm to those who have three kinds of talents, it means that the weak persons seek his own evil.
- MAHENDIRAN V
------------------
குறள் 895:
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசனின் கடும் கோபத்துக்கு உள்ளானவன் இவ்வுலகில் எங்கு சென்றாலும் அவன் உயிர் வாழ வாய்ப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one earns a severe anger from his king, he can never be alive wherever he wishes to move.
- MAHENDIRAN V
------------------
குறள் 896:
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீயில் எரிந்து காயப்பட்டவன் கூட தப்பித்துக்கொள்ள முடியும். ஆற்றல் நிறைந்த வல்லோரிடம் பகைத்துக் கொண்டவன் பிழைப்பதென்பது அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even someone who has been burned to death too can escape. But It is hardly to survive for a person who hates the powerful wisdomed.
- MAHENDIRAN V
------------------
குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குணம் நிறைந்த நல்லோரை ஒருவன் பகைத்துக் கொண்டால், அவனிடம் நிலைத்திருக்கும் பொருள் பணம் எல்லாம் வீணாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a person hates a good hearted ones, all the material money that he has solidly is wasted.
- MAHENDIRAN V
------------------
குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலை போல் ஓங்கி நிற்கும் பெரியோரை அழிக்க நினைக்கும் ஒருவனின் புகழ் பொருள் குடி அனைத்தும் கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reputation, wealth and entire family of someone who thinks of destroying great persons who rises like a mountain will ruin.
- MAHENDIRAN V
------------------
குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயரிய கொள்கை கொண்ட ஆற்றலுடைய வல்லோர் சினம் கொண்டால், ஒரு அரசனின் அடக்குமுறை ஆட்சி கூட அழிந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even the tyrannical rule of a king too will be destroyed if the mighty warriors with high policy get angry.
- MAHENDIRAN V
------------------
குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தவ வலிமை மிகுந்து வலிமை பெற்ற பெரியோர் சீறி எழுந்து சபித்தால், அரண் படை பொருள் நிறைந்திட்ட அரசனும் அழிந்து போவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a man of great strength rises up and curses severely, the king, who is full of bulwark material, would also get ruined.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS