திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை CHAPTER 93. NOT TO CONSUME LIQUOR 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
CHAPTER 93.
NOT TO CONSUME LIQUOR
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுப் பிரியர்கள் தான் சமூகத்திற்கு அஞ்சவேண்டும். சமூகம் அஞ்சாது. மேலும் மட்டு மரியாதையை இழப்பார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the liquor consumer should be afraid of the society. The society need not be afraid of for his action. Moreover, he would lose entire dignity of him.
- MAHENDIRAN V
------------------
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுவை துறப்பது நல்லது. சான்றோரிடம் நற்பெயர் வேண்டாம் என்பவர்கள்தான் மதுவை விரும்புவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's better to stop consuming liquor. If one doesn't want to earn goodwill from the grest persons, he may desire it.
- MAHENDIRAN V
------------------
குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தி பெற்ற தாய் முன்பு நிற்பது கொடுமை. அதுவும் சான்றோர் முன் நிற்பது கொடுமையிலும் கொடுமை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Standing with drunken stage infront of his mother is sinful. Also standing by the same stage infront of  the great is the most sinful.
- MAHENDIRAN V
------------------
குறள் 924:
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணம், மானம் என்ற நற்குனங்கள் நிறைந்தவள் கள்ளுண்டவனை விட்டு விலகி ஓடிவிடுவாள். மரியாதை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The good feminine who has shyness and respectfulness will leave away from the drunken guy. He would stand on Street by losing all his respects.
- MAHENDIRAN V
------------------
குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தும் அறியாமைச் செயல், விலை கொடுத்து குற்றத்தை வாங்குவதற்கு ஒப்பாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The sense of ignorance of drinking habit is equallent to buying crimes by paying money.
- MAHENDIRAN V
------------------
குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நஞ்சு உண்டு இறப்பவருக்கும், கள்ளுண்டு மயங்கி உறங்குபவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no much difference between the person who died and laid on Street due to eating poison and laid on Street by drinking liquor.
- MAHENDIRAN V
------------------
குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளுரில் மறைந்து நின்று கள்ளுண்டால் ஊரார் அறியமாட்டார் என்றில்லை, கள்ளுண்ட கண்களும் மயக்கமும் காட்டிக் கொடுத்து எள்ளி நகையாடப்படுவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's not like that local colleagues wouldn't know if one drinks liquor hiding. The eyes and dizzy of one who is drunken would identify it and he would be laughed at as shamefully by the society.
- MAHENDIRAN V
------------------
குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தி, அருந்தேன் நான் எனச் சொல்வது பொய் மட்டுமல்ல மடைமையும் கூட. மயக்கமும் ஆட்டமும் தானாய் உண்மையை சொல்லும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
After drank, if one says that he hasn't drunk, that is not only lie but also foolish. Dizzy and shaking walk would say the fact.
- MAHENDIRAN V
------------------
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுவுக்கு அடிமையானவனை திருத்த முயற்சிப்பதும், நீருக்குள் மூழ்கியவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதும் ஒன்று தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Both, treating the drinking habitual one and searching the person who has sunk in the water by having a fire lamp are same.
- MAHENDIRAN V
------------------
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மது விரும்பி அருந்தா நிலையில், மற்றொருவன் மது அருந்தி விழுந்து புரண்டு சீரழியும் போக்கை கண்டாவது மதுவை நிறுத்தவில்லை என்றால் அவன் மனித பிறப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a drunken guy can't change himself right even after seeing the disgusting status of an another one drunken person who has uglily sleeping on Street, he cannot be added in the human list.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS