திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 94.
சூது
CHAPTER 94.
GAMBLING
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது விளையாட்டில்  வென்றாலும் தொடர்தல் கூடாது. அவ்வெற்றி தூண்டிலின் இரைக்கு மீன் அகப்பட்டது போலாகும். (ஒரு கட்டத்தில் தூண்டிலுடன் நம்மையும் மீன் நீருக்குள் இழுத்து விடும்.)
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's better to stop playing gambling even if getting victory. Such victory is like the prey tighten in the iron bar is swallowed by fish. One fine day the fish would pull out us into the water.
- MAHENDIRAN V
------------------
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மடங்கை பெற்று, நூறு மடங்கை இழக்க வைக்கும் விளையாட்டு தான் சூதாட்டம். நல்வாழ்வு பெற வாய்ப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling is the game that provides one part for making the player be pleasant, later it would pluck off hundred part from him. No chance at all to have a good life.
- MAHENDIRAN V
------------------
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு முறை வந்த லாபம் மீண்டும் மீண்டும் வரும் என்று சூதாடினால் பணம் அனைத்தையும் இழக்க நேரிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one expects that he would get gain again and again because of getting gain initially during gambling, the entire money would be lost.
- MAHENDIRAN V
------------------
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பத்தையும் தந்து, புகழையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல் ஒருவருக்கு வறுமையை தரக்கூடிய ஒன்று வேறெதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing would cause big poverty as if gambling causes since it would spoil one's life by destructing fame and providing misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதாடும் சூட்சுமம் அனைத்தும் அறிவேன் என்ற பெருமையுடன் ஒருவன் (உண்மையிலேயே அவன் அறிந்திருந்தாலும்) தொடர்ந்து விளையாண்டால், பொருளிருப்பு அனைத்தையும் அவன் இழப்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is saying that he is an expert in gambling and he knows the tricks, and also if he resumes gambling, he would lose his stock of entire wealth.
- MAHENDIRAN V
------------------
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதெனும் தரித்திரத்தில்  விழுந்தவர் சரியான நேரத்தில் பசி தீர உணவும் உண்ணாமல்  துன்பப்படுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one falls on the destitutive domain namely gambling, he could not have his food ontime and also he would meet out misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதாடும் களமே நிரந்தர இருப்பிடம் எனும் அளவுக்கு அதில் மூழ்கிப் போனவர்கள், மூதாயர்களின் செல்வம் மட்டுமல்ல,  நற்பண்புகளையும் இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one tends in the ground of gambling as a permanent station, he would lose not only the wealth earned by his ancestors but also his good traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது, பொருளை விழுங்கும். பொய் புரட்டு பேசவைக்கும். அருளை கெடுக்கும். ஈடில்லா துன்பத்தை தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling would swallow the wealth. It would make one fraud and make speak lie. Graces would go away. It would provide incomparable misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 939:
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது, உடை செல்வம் உணவு புகழ் கல்வி ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை ஒருவனிடமிருந்து விலக்கிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling would pluck out the five prime properties such as cloths, wealth, food, fame and education from the gambler.
- MAHENDIRAN V
------------------
குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் தொடர்ந்து வர வர, வாழ விரும்பி உயிர் மீது ஆசை கொள்வது போல், சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மீது நாட்டம் அதிகரிக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if one is eager to life when he meets out often misery, the one would be attracted more by gambling when he is gambling again and again.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS