Skip to main content

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 95.
மருந்து
CHAPTER 95.
MEDICINE
(THE NATURAL MEDICINE)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நூல்களில் உள்ளபடி, வாதம் பித்தம் சிலேத்துமம் (கபம்)-அளவு படி உண்டு. இவை  அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தீரா.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The three humours that tend in one's body such as Vadham, Pitham and kabham should neither hike nor down. Otherwise, it would cause disease.
- MAHENDIRAN V
------------------
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செரிமான இடைவெளி விட்டு உணவை முறையாக உட்கொண்டாலே போதும் மருந்தென்றொன்று தேவையில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One shoud give gap for digestion between the times of taking food. The one need not take any medicine.
- MAHENDIRAN V
------------------
குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செரித்தறிந்து அளவறிந்து உணவு உண்பவனே நெடுங்காலம் தன் உடம்புடன் வாழ்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who eats levelly and giving gap between times of taking food  could be maintaing his body for long time.
- MAHENDIRAN V
------------------
குறள் 944:
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உண்ட உணவு செரித்த பின்பு உடல் ஏற்கும் உணவு வகையறிந்து பசித்தப் பின்பு உணவுண்பதே சிறப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's great if one eats food after digestion and knowing which food fit for his body and eating only at the time of hungry.
- MAHENDIRAN V
------------------
குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடலுக்கு ஒத்துவராத உணவை உட்கொள்ளாமலிருப்பதே உடல் நலத்திற்கு உயர்வான மருந்து.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best medicine is not to eat inappropriate food to one's body's status.
- MAHENDIRAN V
------------------
குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அளவறிந்து உணவு உண்பவன் ஆனந்தமாய் இருப்பான்.அளவறியா உணவு உண்பவன் அவதிப்படுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who eat food limitedly would be pleasant enough. And others would get miseries due to having food unlimitedly.
- MAHENDIRAN V
------------------
குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பசியின் அளவு அறிந்து உணவு உண்பவனுக்கு எந்தக் கேடும் இல்லை. பசி இல்லாத நேரத்தில் அதிகம் உண்பவனுக்கு அளவிலான நோய் வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who eat food on time only at the time of hunger, no badness to him. If eating more at the time of no hunger would get diseases a lot.
- MAHENDIRAN V
------------------
குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோய் வந்த ஒருவருக்கு அந்த நோய் அவருக்கு எப்படி வந்தது என்று ஆராய்ந்து அந்த நோயைத் தீர்ப்பதற்கு அவரின் உடல் நிலை அறிந்து ஆராய்ச்சி செய்து மருத்துவம் பார்ப்பவரே மருத்துவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The good treatmentor is one who knows the type of sick, how it did come, what is the remedy to cure according to the status of the body of the patient.
- MAHENDIRAN V
------------------
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோயுற்றவரின் வயது, நோயின் தன்மை, காலம் அறிந்து வைத்தியம் பார்ப்பவரே கற்றறிந்த மருத்துவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The well learned doctor is one who knows the age of the patient, type of sick, duration of sick tending in the body of the patient.
- MAHENDIRAN V
------------------
குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோயுற்றவர், வைத்தியர், மருந்து மற்றும் மருந்து உற்பத்தியாளர் இந்நான்கு தன்மைகளை உள்ளடக்கியது தான்  மருத்துவ கலை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The medical domain intents the four sub domains such as patient, doctor, medicine and the manufacturer of the medicine.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...