Skip to main content

திருக்குறள். அதிகாரம் 91. பெண்வழிச் சேறல் CHAPTER 91. THE EFFECTS OF DOMINATION OF FEMINISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 91.
பெண்வழிச் சேறல்
CHAPTER 91.
THE EFFECTS OF DOMINATION OF FEMINISM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லறம் முக்கியம் தான் என்றாலும், மனைவியின் வாக்கு படியே நடக்கும் ஒருவன் தன் செயலில் சிறப்பாக பணியாற்றிவிடுவான் என்று சொல்ல முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although Living kindly with wife is important, it is not possible to say that a man who obeys his wife's words will do well in his work.
- MAHENDIRAN V
------------------
குறள் 902:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடமையேதும் ஆற்றாது மனைவியின் பெண்மையே பெரிது என்றிருப்பவனின் ஆக்கங்கள் வெட்க்கத்துக்குறியதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The prides earned by one is shameful if the one thinks that only his wife is prime without doing his duties to the society.
- MAHENDIRAN V
------------------
குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நலம் தரும் என்று எண்ணி, இல்லத்தரசியிடம் மிகவும் தாழ்ந்து நின்று வாழ்பவன் நல்லோர் முன் நாணி நிற்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who thinks that it is good and lives very lovely to the housewife will stand shamefully in front of the good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 904:
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியிடம் அஞ்சி அதன் பிரதிபலன் நன்மையாகும் எனில் அது நன்றே. ஆயினும் அது பாராட்டத்தக்கது அல்ல.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although obeying wife's words is good and its reputation seems to be beneficial, it is not appreciable.
- MAHENDIRAN V
------------------
குறள் 905:
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியின் சொல்லுக்கு பயந்து நடப்பவனுக்கு, நல்லோர்க்கு நற்செயல் செய்யும் வாய்ப்பு கிடைக்காது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who is afraid of his wife's words will not have the opportunity to do virtual helps to society.
- MAHENDIRAN V
------------------
குறள் 906:
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியின் அன்பு இனிமை- இவற்றை மட்டும்  விரும்பி ஒருவர் தேவர்கள் போல் வாழ்ந்தாலும், அவர் சமூகத்தில் தன் பெருமையை இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only wife's love is sweet- even if one lives like heaven by thinking only this way of life is right, he will lose his pride in society.
- MAHENDIRAN V
------------------
குறள் 907:
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவி தன் ஏவலினால் கணவனின் ஆளுமையில் பங்கு கொண்டு பெருமை கொள்வதை விட, வெட்க்கம் அடக்கம் தன்மையை காட்டி பெருமையடைவதே சிறப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To a house wife, Rather getting prides by showing shyness and obedience is greater than getting prides from her husband's brave activities that are done because of her directions.
- MAHENDIRAN V
------------------
குறள் 908:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியே எல்லாம் என்று அன்பொழுக வாழ்பவன், நட்புக்கும் உதவி செய்ய மாட்டான், நல்லோர்க்கும் நற்பணியாற்றமாட்டான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who lives in love that his wife is everything, would not forward to help to his friends and any other good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெண் பேச்சு கேட்டு நடப்பவர் அறச்செயல்கள் செய்யமாட்டார். இவரால் பொருள் உதவியோ அல்லது பிற உதவியோ பிறர்க்கு செய்ய முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The one who listens to female's speech cannot do any virtual deeds. Also he cannot do any kind of assistance to others.
- MAHENDIRAN V
------------------
குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன்கு சித்திக்கும் எண்ணமும் பெருஞ்செல்வமும் பெற்றிருப்போர் மனைவியின் சொல் கேட்டு நடக்க விரும்ப மாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are well in thinking for good and being financially well would not want to listen to their wives' words.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?