திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER. 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 96.
குடிமை
CHAPTER 96.
THE PRIDES OF FAMILY AND BIRTH
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்குடி பிறந்தாரிடம் மட்டுமே சிறந்த பண்புகளும் நாணமும் ஒரு சேர இயல்பாக காணப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the people who are the high born would have modesty along with their good traits habitually.
- MAHENDIRAN V
------------------
குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்குடி பிறந்தார், ஒழுக்கம் வாய்மை நாணம் ஆகிய பண்புகளிலிருந்து விலகி நிற்க ஆசைப்படார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are the high born wouldn't desire to leave out the habits of morality, honesty and modestly.
- MAHENDIRAN V
------------------
குறள் 953:
நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகமலர்ச்சி, ஈகை குணம், அன்பு/இரக்கம் அடுத்தவரை இகழா குணம் இந்நான்கும் நிறைந்தோரே நேர்மையான குடியில் பிறந்தவராவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are having these four good habits such as smiling when meeting others, helping tendency, mercy and being not to blaming others are considered that they are high born in noble family.
- MAHENDIRAN V
------------------
குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அடுக்கடுக்காய் கோடி பணம் கொடுத்தாலும், நற்குடியில் பிறந்தோர்  குடிப்பெருமையை இழக்கும் செயலை செய்ய மாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The highly born ones would never lose the dignity and prides of their family even if they are paid crores of amount to do an illy act.
- MAHENDIRAN V
------------------
குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் பிறந்தோர், வறுமை வந்து வாட்டினாலும், கொடை தரும் பண்பை என்றும் நிறுத்தமாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are born in noble family would never stop their trait of  donating to others even if they are in poverty state.
- MAHENDIRAN V
------------------
குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடிமக்கள், குலப்பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக, பஞ்சம் வந்தாலும் கூட வஞ்சம் நிறைந்த வாழ்க்கைக்கு மாறிவிடமாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who are highly born in good family would not desire to going to hypocrisy life even if they have scarcity of wealth, because of protecting the pride of their family.
- MAHENDIRAN V
------------------
குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடி பிறந்தார் செய்யும் குற்றம் சிறிதாகினும், அக்குற்றம் நிலவு ஒளி போல் வெட்டவெளிச்சமாக தெரிய ஆரம்பித்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a crime (despite being simple) done by ones who are born in noble family would be established as a big one as if the moon is visible on the sky.
- MAHENDIRAN V
------------------
குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பான குடும்பத்தில் பிறந்தவன் பண்பற்றவனாக நடந்துகொண்டால், அவன் குடும்பப் பெருமை குறைந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is immoral in activities though he is born of a noble family, the goodwill of his family would go down.
- MAHENDIRAN V
------------------
குறள் 959:
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலத்தின் பெருமையை அதில் விளைந்த பயிரின் தரம் காட்டுவது போல், ஒருவரின் நற்ச்சொல் நற்பேச்சு அவன் குடியின் பெருமையை எடுத்துரைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One's talk would identify the pride of his family as if the plant proves the pride of the land from which it grows.
- MAHENDIRAN V
------------------
குறள் 960:
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் தன் வாழ்க்கைக்கு நலம் வேண்டுமானால், அவரிடம் இயல்பாக நாணம் வேண்டும், அவர் தன் குலத்திற்கு பெருமை வேண்டுமானால் பணிவு வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one wants goodness to his life, he must have habitually the trait of modesty. And if he wants pride for his birth, he must be submissive to society.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS