திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 92.
வரைவின் மகளிர்
CHAPTER 92.
WANTON WOMEN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பு என்பது அறவே இல்லாமல், பொருளை மட்டும் குறிவைத்து இனிதாக பேசும் விலைமகளிரின் செயல் இழிவானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The acts of wanton women done without love but speaking sweetly only for focusing price is the most immoral one.
- MAHENDIRAN V
------------------
குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பயன் என்ன என்பதை மட்டும் மனதிற்கொண்டு பயனடைய அன்பாய் பேசும் பண்புள்ள விலை மகளிரை விரட்டிடுக.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Push out the wanton women who approach with cunning smile for  their own gain. It's like a devil approach.
- MAHENDIRAN V
------------------
குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விலை மகளிர், பொருளுக்காக மட்டும்  கட்டித் தழுவுவதென்பது, இருட்டறையில் இனம் தெரியா பிணத்தை தழுவுவதற்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of hugging of wanton woman only for money is like hugging an anonymous dead body in the dark room.
- MAHENDIRAN V
------------------
குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அருட்பொருள் யாது என்று ஆராயும் நல்லோர்கள் அற்ப இன்பம் தரும் விலை மகளிரின் சிறுமையை விரும்ப மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are always thinking about the nature grace would never like the lust given by the silly wanton women.
- MAHENDIRAN V
------------------
குறள் 915:
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றறிவும் பட்டறிவும் பெற்ற பெரியோர் விலை மகளிரின் அற்ப சுகத்தை விரும்ப மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have knowledge learned through experience and academy would never like the silly lust.
- MAHENDIRAN V
------------------
குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அழகையும் திறமையையும் காட்டி செருக்குடன் ஈர்க்கும் விலை மகளிரிடம், ஒழுக்கமே உயர்வு எனும் பெரியோர் மயங்க மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who think always that only morality is great would never be attracted by the fake pretty wanton women who act proudly.
- MAHENDIRAN V
------------------
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதை  நிலை நிறுத்த தெரியாத மதிகெட்டோர் தான் விலைமகளிரின் விற்பனையில் வீழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ignorants who do not know to stabling the mind would fall on the sales of wanton women.
- MAHENDIRAN V
------------------
குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதையும்  ஆராய்ந்து நோக்கா அறிவிலார், விலைமகளின் வஞ்சனை அணைப்பை மாய மயக்கம் என்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ignorants who do not know to examine which is right and false would say that the hug of wanton woman is a pleasant dizzy.
- MAHENDIRAN V
------------------
குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரையறை இல்லா விலைமகளிரின் மென்மையான தோள்களில் தீ மக்கள் சாய்ந்து கிடப்பது நரகத்தில் இருப்பதற்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Being laid of illy people on the soft arms of immoral-wanton women is equallent to being laid in the hell.
- MAHENDIRAN V
------------------
குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கள்ளம் கபடம் கொண்ட பெண்ணிடமும், கள், சூது இவைகளிடமும் நாட்டம் கொண்ட மனிதர்கள் மரியாதை கெட்டவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People those who are eager to be with the woman who has characteristics like lie, hypocrisy, and drugs, gambling are known as disrespected men.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS