திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 98.
பெருமை
CHAPTER 98.
PRIDE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others.
- MAHENDIRAN V
------------------
குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறப்பால் எல்லோரும் ஒன்றே என்றாலும் அவரவர் தொழில்களில் ஒவ்வொருவரின் செயல் திறனே அவர்களை  வேறுபடுத்துகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The birth is common to all. Only the profession and skills of activities of everyone are varying them.
- MAHENDIRAN V
------------------
குறள் 973:
மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்ந்த பண்பில்லா மேல்  மக்கள் மேல் மக்களல்லர். சிறந்த பண்புகள் நிறைந்திட்ட கீழ் மக்கள் கீழ் மக்களல்லர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
High graded people who don't have great traits aren't high graded. Likewise, low graded people aren't low graded if they have great traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் தன் வாழ்வில் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்வதென்பது, ஒரு பெண் தன் கற்பை காத்து வாழ்வது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The stance ones who live by following all moralities in their life is like a woman who is honestly living by protecting her virginity.
- MAHENDIRAN V
------------------
குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரியச் செயல்களை ஆனந்தமாய் ஏற்று அற்புதமாக செய்து முடிப்பவர்களே பெருமைக்குரியவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones those who are daring to attend willingly rare works that might not be able to be done by others are highly graded people.
- MAHENDIRAN V
------------------
குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அருஞ்செயல் புரிந்த பெரியோர்களை போற்றிப் புகழ்வதென்பது பரந்த எண்ணம். சிறுமை உணர்ச்சியுள்ளவர்கள் அதை அறியார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The trait of applauding other's tough activities is called broad minded. Silly people would not know it.
- MAHENDIRAN V
------------------
குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறப்பு நிலை செயல்பாடுகள் சிறுமை எண்ணம் படைத்தோர் கையில் அகப்பட்டால் சிறப்புகள் அனைத்தும் சீரழிந்துபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the important and great works are given to silly minded people, all greatness of those works would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெரிய மக்கள் எப்பொழுதும் அடக்கத்துடன் இருப்பர்.  சிறுமை புத்தி கொண்டவர்கள், தனக்குத்தானே  பெருமைப்படுத்தி வியந்துக்கொள்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great people would be always humble but the low traited people would be praising proudly themselves.
- MAHENDIRAN V
------------------
குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருமைப்படக்கூடிய செயல் செய்தாலும் பெருமக்கள் பெருமிதம் கொள்ள மாட்டார்கள். சிறு மக்களோ தம்பட்டம் அடித்து மகிழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great traited people wouldn't be eager to be proud of even if they have done a highly graded work. But the low traited would be dancing here and there at the same situation.
- MAHENDIRAN V
------------------
குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருங்குணம் கொண்டோர் அடுத்தோர் குறைகளை அலச மாட்டார். சிறுங்குணம் கொண்டோரோ பிறரின் குற்றத்தை கூவி விற்று மகிழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have good traits wouldn't be minding other's drawbacks as big. But the low traited ones would be eager to spreading such drawbacks to others.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS