Skip to main content

அதிகாரம் 61 மடி இன்மை CHAPTER 61 TO CRACKING LAZINESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 61
மடி இன்மை
CHAPTER 61
TO CRACKING LAZINESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறந்த குடி அனையாத விளக்காக இருந்தாலும், சோம்பலும், சோர்வும் இருந்தால் அந்த குடி மங்கிப் போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if a family is glittering, if laziness is tending there, such family would go down more and more.
MAHENDIRAN V
------------------
குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறந்த குடியை உயர்வு செய்ய வேண்டுமாயின், சோம்பல் சோகம் தரும் என அறிந்து சோம்பாமைக்கு வித்திடவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one wants to hiking prides of his family, he must know the severeness of the laziness, and has to crack the laziness in no time.
MAHENDIRAN V
------------------
குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோம்பல் அது சோகம் என அறியாத அறிவிலிகள் தன் குடி தனக்கு முன்பே மங்கிப் போவதை காண்பர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is fool because of not knowing that the laziness would cause sadness would lose his family before he demises.
MAHENDIRAN V
------------------
குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோம்பல் நிறைந்த வாழ்க்கையில் குற்றமும் பெருகும். குலப்பெருமையும் சீர்குலையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The family on which laziness tends would meet out crimes, and would lose out the dignity of it.
MAHENDIRAN V
------------------
குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலம் தாழ்த்தல், சோர்வடைதல், மறந்து போகுதல், அதிக தூக்கம் - இவை நான்கும் தாழ்வை நோக்கி அழைத்து செல்லும் மரக்கலம் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stances of four traits such as postponing for an act, being lazy, forgetting, longer sleep are known as a boat that leads one to bring to deep misery.
MAHENDIRAN V
------------------
குறள் 606:
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலம் பல ஆண்டு நிறைந்த செல்வம் பெற்றாலும் சோம்பல் எனும் நோயிருந்தால், அனைத்தும் பயனற்று போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is having a lot of wealth through lands lot, if he has the disease - laziness, all would be collapsed.
MAHENDIRAN V
------------------
குறள் 607:
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோம்பலில் வீழ்ந்து முயற்சியேதும் செய்யார் பலரின் இகழ்ச்சிக்கு ஆளாவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who falls down in laziness and doesn't try even a bit for survival would be criticised very much by the society.
MAHENDIRAN V
------------------
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறந்தகுடி பெருமையாயிருந்தாலும் சோம்பலது அங்கு குடிகொண்டால், பகைவரிடத்தில் அக்குடி அடிமையாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one's birth is proud, if the laziness tends there, his family would become slave to many.
MAHENDIRAN V
------------------
குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாழ்க்கையில் சோம்பலை ஒருவன் விட்டு விட்டால், குலப்பெருமை ஓங்கும் ஆண்மையின் ஆளுமையும் உயரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one comes out from lazy feeling, the domain of his family would hike up, and his masculine status would raise up.
MAHENDIRAN V
------------------
குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோம்பலை தூக்கியெறிந்தவன் உலகையே காலடிக்குள் கொண்டுவந்த மன்னனுக்கு சமமாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who has cracked the  laziness is compared to a king who has defeated the world and keeping it  on his feet.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...