அதிகாரம் 62 ஆள்வினை உடைமை CHAPTER 62 THE FEATURES OF HARD WORK BEYOND THE FATE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 62  ஆள்வினை உடைமை
CHAPTER 62 THE FEATURES OF HARD WORK BEYOND THE FATE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 611:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இதை செய்ய முடியுமா என்று மலைத்து நிற்க கூடாது. செய்து முடிக்க முயற்ச்சித்தால் வெற்றி கிட்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Being stunned because of fearing to finish a work is not wisdom. If trying to finish it, victory would come in hand.
MAHENDIRAN V
------------------
குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செய்யும் செயல் கடினம் என நினைத்து பாதியில் நிறுத்துதல் அறிவாகாது. அதை கடினமானாலும் செய்துமுடித்திட முயற்சிக்கவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Pausing a work by thinking that it is difficult is coward. Even if it is hard, trying to finish it is energized sense.
MAHENDIRAN V
------------------
குறள் 613:
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர்க்கு உதவி செய்யும் மனோபக்குவம் முயற்சியின் வீரியத்தில் உள்ளது. முயற்சிக்கு சோர்வுற்று உதவி புரிதலை நிறுத்துதல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Thinking to help others is based on one's try. Shouldn't be fearing and stopping to help others saying being lazy.
MAHENDIRAN V
------------------
குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உதவி செய்வேன் என்று சூளுரைத்து முயற்சிக்காமல் இருப்பது, படையில் வெறும் வாளை வைத்து வீண் வீச்சு செய்வது போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having pledged to help earlier, then being not to try to do so is like waving sword fakely in the war.
MAHENDIRAN V
------------------
குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் இன்பம் பெரிது என்று கருதாமல் கடமையாய் பலருக்கு உதவுபவன், சுற்றத்தாரின் துன்பம் போக்கும் வல்லவனாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who acts as a duty without selfishness for helping others is considered as the great man who is caring society to wipe their miseries.
MAHENDIRAN V
------------------
குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முயன்றால் மட்டுமே செல்வம் கிட்டும். ஏதும் செய்யாமல் சும்மா இருத்தல் துன்பத்திற்கு வழிவகுக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only way to get wealth is that to try. Being mere would cause to earn miseries a lot.
MAHENDIRAN V
------------------
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோம்பலில் திளைப்பனிடம் கருநிற மூதேவி குடியிருக்கிறாள். சோம்பாது உழைப்பவன் வாசலில் திருமகள் உட்புகுவாள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Dark goddes of unluck would tend with lazy fellows while the goddes of wealth would hug the hard worker who throws laziness.
MAHENDIRAN V
------------------
குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விதிப் பயனில் வீழ்வது கூட குற்றமில்லை ஆனால் ஆற்றும் கடமையில் அறிவார்ந்து செயல்படாமல் இருப்பதே குற்றமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Falling down due to one's fate is not a crime but it is utter crime what one is sitting mere instead of doing a work that should be done.
MAHENDIRAN V
------------------
குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விதியின் காரணத்தால் வெற்றி கிட்டாது என்றாலும், கடும் உழைப்பை கருத்தில் கொண்டு அவ்விதியே அவனுக்கு பலனை அள்ளித்தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Despite saying that shouldn't get victory due to fate, the same fate would provide returns because of one's hard work.
MAHENDIRAN V
------------------
குறள் 620:
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழைக்கும் திறன் பலம் நிறைந்தால், ஊழ்வினை தடையையும் தகர்த்தெரிந்து வெற்றி தரும். வெற்றியே அவனது விதியாக மாறும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one's hard work is found to be very strong, it would cause a victory by  cracking the bad fates of one. The victory would be his real fate.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS