அதிகாரம் 67 வினைத்திட்பம் CHAPTER 67 WILLPOWER IN ACTION 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 67 வினைத்திட்பம்
CHAPTER 67
WILLPOWER IN ACTION
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 661:
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன உறுதி ஒன்றே மனிதனுக்கு பலம். மற்றவையெல்லாம் அதற்கு பிறகுதான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only Having stability in mind is biggest strength to one. Others are considered only secondly.
MAHENDIRAN V
------------------
குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இடையூறு வராவண்ணம் ஒருவரின் செயல் திறன் இருத்தல் வேண்டும். இடையூறு ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனோதிடம் வேண்டும் என்பதே அறிஞர்களின் கோட்பாடு..
வை.மகேந்திரன்

Explanation in English:
One should plan strongly for his  profession not to meet any troubles till he reaches the goal. Even if there may be difficulties, should know to crack such - is the principles of experts.
MAHENDIRAN V
------------------
குறள் 663:
கடைக்கொட்கச் தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செயல்வடிவம் செய்து அது முற்றுபெறும் போதே வெளி கொணர வேண்டும். அப்பொழுதான் அதற்கு மதிப்பு. இடையில் வெளி கொணருதல் நன்மை பயக்காது.
வை.மகேந்திரன்

Explanation in English:
A project being done by one should be revealed after the full completion of such work. Only then it would be foud to be valid. If such work is revealed on half of the way there wouldn't be any gain of the work.
MAHENDIRAN V
------------------
குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இச்செயலை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்வதோடு நிற்காமல் சொல்லியபடி செய்து நிறைவேற்றுவதே அறிவார்ந்த செயல்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Talking and planing to do a work is not a matter, Bringing such work to finish without fail as if planning  that is wisdom.
MAHENDIRAN V
------------------
குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு சாமன்யன் தன் மனோதிடத்தால் செயல் புரிந்து வெற்றிபெற்றால், மன்னன் அதை அறிய பெற்றால், பெரிதும் அவன் பாராட்டப்படுவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a citizen achieves at work successfully by his willpower, if it is brought to the knowledge of the king, he would be felicitated enormously by all.
MAHENDIRAN V
------------------
குறள் 666:
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செய்து முடிக்க எண்ணும் செயலில் தீவிர முயற்சி இருந்து 'செய்து முடித்து விடுவேன்' என்று மன உறுதியுடன் செயல்பட்டால் அப்பணியில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is having a determination intensively that he would complete his plan successfully, he would surely succeed in that.
MAHENDIRAN V
------------------
குறள் 667:
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெரிய தேரை இழுக்கும் அச்சானி மிகச்சிறியதுதான். எனவே சாதனை செய்வதற்கு பெரியவர் சிறியவர் என பாகுபாடு காண்பது அறிவன்று.
வை.மகேந்திரன்

Explanation in English:
The axis of a chariot is very small but it pulls the giant chariot. So considering the type of a person to do a work is poor thought.
MAHENDIRAN V
------------------
குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் மனக்கலக்கம் இல்லாது, பிரியப்படும் பணியினை தொய்வின்றி செய்யுங்கால் அவர் செய்யும் செயலில் வெற்றி காண்பார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one does his duty interestingly without any confusion of mind, and without any lagging, he would surely meet out success.
MAHENDIRAN V
------------------
குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பணி முடிவில் இன்பம் கிட்ட வேண்டுமாயின், துன்பங்கள் சிலவற்றை சந்திக்க நேர்வது இயல்பு, ஒருவர் கிடைக்கப்போகும் இன்பத்தை மனதிற்கொண்டு துணிவுடன் செயலாற்ற வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one wants to get pleasance at his work on its completion, it's nature to meet some hurdles during doing such work. He must be doing bravely his work only by thinking the upcoming pleasance.
MAHENDIRAN V
------------------
குறள் 670:
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வேறு எந்த வகையில் உறுதி, பெற்றவராயிருந்தாலும், செய்யும் தொழிலில் அதுச் சார்ந்த செயலில் மனவலிமை இல்லாதோரை இவ்வுலகம் போற்றாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is strong enough at any respect, if he doesn't have a strong willpower on his regular profession, the world wouldn't praise him.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS