Skip to main content

அதிகாரம் 69 தூது CHAPTER 69 MESSANGER OF EMPEROR (AMBASSADOR) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 69
தூது
CHAPTER 69 
MESSANGER OF EMPEROR
(AMBASSADOR)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பும் அறிவும் நிறைந்து நற்குடியில் பிறந்து மன்னனுக்கு விசுவாசமாக நடப்பவனே நல்ல தூதன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The good qualities of the best ambassador are, having distinguished knowledge, birth quality, being benevolent to a king.
MAHENDIRAN V
------------------
குறள் 682:
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பு, அறிவு, சொல்லாற்றல் ஆகியவை நல்ல தூதருக்கு இன்றியமையாததாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having must to an ambassador are, kindness, wisdom on sharing message, knowing to speak impressively.
MAHENDIRAN V
------------------
குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆய்ந்து அறிந்து கற்றுனர்ந்த தூதுவரால் மட்டுமே பிற அரசிடம் தூது வகை செய்து தன் அரசனின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ambassador who knows to examine good ones, and being good in education in all respects, and knowing to share messages intelligently can bring victory to the king.
MAHENDIRAN V
------------------
குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆராய்ந்து பார்க்கும் அறிவு, இயற்கை அறிவு நல்ல தோற்றம் இவை  மூன்றும் ஒரு தூதருக்கு அவசியமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The three traits such as having knowledge to examine, nature sensibility and attractive appearance are important to an ambassador.
MAHENDIRAN V
------------------
குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசன் யாது சொன்னாலும்  அடுத்த அரசிடம் தூது சொல்லும் முறையில் கண்ணியம் காப்பவனே நல்ல தூதுவன். அவன் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும். நீக்க வேண்டியதை அறிவுடன் நீக்க வேண்டும். எதிரிமன்னனுக்கு சினம் வரா வகையில் அந்த தூது அமையவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Whatever a king asks to share messages to another king, an ambassador must know to contol and segregate the messages, to showing kindness during passing on messages and behaving kindly, and to know not to make another king get anger of sharing messages.
MAHENDIRAN V
------------------
குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அஞ்சா குணம், குறிப்பறிந்து ஆற்றும் அறிவார்ந்த செயல், எதிரியை சினம் கொள்ளா வைக்கும் தந்திரம்- இவை தூதுவனுக்கு முக்கியம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Being not to fear, doing actions by knowing trend, knowing tricks not to make anger the recepient - are the sensible principles that to be had by an ambassador.
MAHENDIRAN V
------------------
குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடமையுணர்ந்து, இடமறிந்து, காலம் தெரிந்து செய்தி சொல்லும் திறனே தூதுவனுக்கு பலம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The strength of an ambassador is that to act by knowing situation, time and place on sharing messages.
MAHENDIRAN V
------------------
குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளத்தூய்மையுடன், துணிச்சலுடன், நட்புடனும் வாய்மை உரைப்பவனே நல்ல தூதுவன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best ambassador is who is having purity in heart, bravery on actions, having cooperativeness and expressing truths.
MAHENDIRAN V
------------------
குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தூதன் எனப்படுபவன் தவறியும் குற்ற வார்த்தை கூறாதவனாக இருத்தல் வேண்டும். உறுதி மனம் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The ambassador should not tongue slip by crime words at any cost. He must have strong tendency in mind.
MAHENDIRAN V
------------------
குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தூது சொல்லுங்கால், ஆபத்து நேரும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பயம்கொள்ளாமல், அரசுக்கு விசுவாசம் காட்டி கடமையாற்ற துணிபவனே சிறந்த தூதன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Incase of situation is dangerous on enemy's ground, an ambassador should not fear any more at all. He has to do actions bravely and to be grateful to the king.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?