Skip to main content

அதிகாரம் 66 வினைத் தூய்மை CHAPTER 66 PURITY OF ACTS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 66
வினைத் தூய்மை
CHAPTER 66
PURITY OF ACTS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவருக்கு துணை ஆக்கம் தரும் கால் அவர் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றியை ஈட்டுவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one gets a wisdomed assistance for his acts, he would get victories in all respects.
MAHENDIRAN V
------------------
குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புகழும் அறமும் தராத செயல்கள் வீணானது. விட்டொழிப்பதே நன்மைக்கு அழகு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The acts of one that don't provide prides and if it's found to be immoral, that ought to be given up immediately.
MAHENDIRAN V
------------------
குறள் 653:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புகழினை கெடுக்கும் செயல்களை தவிர்த்தால் மட்டுமே ஒளி வீசும் வாழ்வு அமையும் இல்லேல் அவப்பெயர்தான் மிஞ்சும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only when one avoids to do the acts that destroys one's good status, he can get a brightening life otherwise only dirty name would remain.
MAHENDIRAN V
------------------
குறள் 654:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தெளிந்த அறிவுடைய மக்கள் துன்பமது வந்தாலும் கூட இழிச்செயல்களை ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Good people would never dare to do dirty acts even if they are in big suffering in life.
MAHENDIRAN V
------------------
குறள் 655:
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வருந்தும் செயல்களை செய்து விட்டு பின் ஏன் அதை செய்தோம் என வருந்துவது     அறிவற்றத்தனம். அச்செயலை மீண்டும் செய்யாமல் இருப்பதே அறிவாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is worried out for his having done a dirty acts earlier, that is foolish. Even if that had been done because of situation, that acts should never be done again.
MAHENDIRAN V
------------------
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெற்ற அண்ணை பசியால் துடித்தாலும் பொருள் வேண்டி இழிச் செயல்களை செய்தல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one's mother is suffering from a big hunger, he should not dare to do any immoral acts for searching money.
MAHENDIRAN V
------------------
குறள் 657:
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இழிச் செயல் செய்து பழி சுமந்து வாழ்வதைவிட வறுமையில் வாடி வாழும் வாழ்க்கை மேன்மைபடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Living with trend of poverty is far better than living by earning big wealth by immoral a dirty activities.
MAHENDIRAN V
------------------
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தகாதச் செயல்கள் தரம் இழக்க செய்யும் என்று அறிந்தும் பொருள் வேண்டி செய்யுங்கால், துன்பமும் துயரமும் தான் மிஞ்சும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Despite knowing that immoral acts of one would decrease his quality in life and doing such acts, only miseries and evils would remain in his life.
MAHENDIRAN V
------------------
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரை அழவைத்து ஈட்டிய பணம், பொருள் அதிகமாய் அழவைத்து அழிந்துபோகும்.
நேர்மையாய் வந்த பணம் நிலையாக நிமிர்ந்து நிற்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth earned by one by making crying others would cause him a big cry. The wealth earned by one honestly and morally would stand stably with him.
MAHENDIRAN V
------------------
குறள் 660:
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீய வினைகளால் ஈட்டிய பணம் மற்றும் பொருளை பாதுகாக்க நினைப்பது, ஈர மண்ணில் பானை செய்து அதில் தண்ணீரை பாதுகாப்பது போல் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Protecting money and properties that were earned by illy ways is like the act of saving water pouring it in the wet soiled pot.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...