அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 65 சொல்வன்மை
CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாவன்மை நலம் பல பயக்கும் ஆதலால் அது ஒரு பெருந்செல்வம். இதற்கு இணை கூறுவது அரிது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The strength of eloquence is  a great wealth to all. To compare this power by another skill is hardly.
MAHENDIRAN V
------------------
குறள் 642:
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாவன்மையால் நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும். நாவை தீயச் சொல் சொல்லாது கட்டுப்படுத்தும் திறன் அவசியம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The eloquence may cause good and bad time versa. The effort of controlling tongue for not using illy words is necessary.
MAHENDIRAN V
------------------
குறள் 643:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சொல்லாடல் சிறப்பாயிருந்து ஒருவர் பேசும் ஆற்றல், கேட்போர் மட்டும் அல்லாது கேளாதாவரையும் கவர்ந்திழுக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The eloquent speech of one would attract not only those who are willing to hear, but also those who are not so interested to listen.
MAHENDIRAN V
------------------
குறள் 644:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருளறிந்து, ஆள் அறிந்து இடம் அறிந்து பேசுதல் வேண்டும். அதுவே அறமாகும்.
புரிந்து கொள்ள முடியாதோரிடத்தில் மேதாவித்தனம் காண்பிக்கக்கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
While speaking, should take care of whom we speak, what we speak. That is the moral way. Shouldn't show our intellectuality to an inappropriate person by talk.
MAHENDIRAN V
------------------
குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேசும் சொற்களில், உயர்ந்த சொற்களை பயன்படுத்த வேண்டும். அதை விட சிறந்த  சொல் இல்லையே என்பது போல் இருக்க வேண்டும் பேசும் சொற்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Using sweet words during speaking is very important. The words should be the best as if not to find out any synonym.
MAHENDIRAN V
------------------
குறள் 646:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அடுத்தோரை கவரும் விதத்தில் பேசுவது எப்படி முக்கியமோ அது போல பிறர் சொல்லும் நற்சொற்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Whereas one wills to speak with others interactively, he should be hearing other's good words spoken by them .
MAHENDIRAN V
------------------
குறள் 647:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூறும் சொற்கள் சிறப்பாய் இருந்து, வாதத்திற்கு அஞ்சா நெஞ்சம் கொண்டு, வலியுறுத்தி நாவன்மை புரிபவனை வெல்வது கடினம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's hardly to defeat one who wisely eloquences bravely and also speaking sweet words impressively.
MAHENDIRAN V
------------------
குறள் 648:
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வகைப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்தி இனிமையாய் பேசும் வல்லவனுக்கு நல்லோரும் வல்லோரும் நட்பாவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One whose eloquence is in order and lined up and speaking  understably good words would get literate friend circle a lot.
MAHENDIRAN V
------------------
குறள் 649:
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சபைக்கு தகாத வார்த்தைகளை பேச இயலாத சமயத்தில், பற்பல சொற்களை தேடிப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்படுவது இயல்பே.
வை.மகேந்திரன்

Explanation in English:
While being in the situation not able to speak some inappropriate words infront of audience on the stage, it's difficult and awkward to find out alternative words.
MAHENDIRAN V
------------------
குறள் 650:
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றறிந்த அனைத்தையும் பிறரும் அறியும்வண்ணம் கருத்துரைக்க இயலாமல் போகும் நிலை, மலர்ந்த தாமரை மணம் தராத நிலைக்கு ஒப்பாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of being not able to explain one's learnt aspects to others is like a lotus that blossomed but not emits aroma. 
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS