அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
CHAPTER 70
TO CO-OPERATE TO KING
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்கள் மன்னரிடம் உள்ள தொடர்பு, விலகாமலும் நெருங்கி போய்விடாமலும்  நெருப்பில் குளிர் காய்வது போலிருக்க வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The relationship between people and the king neither should be close nor being far away. It should be like warming up body infront of fire during cold time.
MAHENDIRAN V
------------------
குறள் 692:
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசர் விரும்புவதையெல்லாம் தானும் விரும்பி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலிருப்போரே அரசால் ஆதாயமடைவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the men who don't desire all things that a king desires would get gain from the king.
MAHENDIRAN V
------------------
குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசருக்கு நெருக்கமாக இருப்போர் தங்கள் மீது ஏதும் பழி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லேல், அரசர் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The people who are close to the king must take care of not getting any evil name at all circumstance, otherwise they would lose belief that the king put on them.
MAHENDIRAN V
------------------
குறள் 694:
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சபையில் பெரியோர்கள் அமர்ந்திருக்கையில், ஒருவர் மற்றோர் காதில் ரகசியம் பேசி சிரிப்பொலி எழுப்புதல் சபை நாகரிகமன்று.
வை.மகேந்திரன்

Explanation in English:
While great people are sitting on the stage, if one and another make noise by speaking ear to ear and laughing, that's not the stage etiquette.
MAHENDIRAN V
------------------
குறள் 695:
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசரோ அல்லது சபைப் பெரியோர்களோ தங்களுக்குள் ரகசிய விவாதம் செய்யுங்கால், மற்றவர் காது கொடுத்து கேட்க முயற்சிப்பதோ, என்ன விஷயம் என்று வினவுவதோ தவறு.
வை.மகேந்திரன்

Explanation in English:
While the king and people of ministry are secretly arguing regarding nation affairs, if others try to hear by lending ear or questioning regarding that is utter fault.
MAHENDIRAN V
------------------
குறள் 696:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசரிடம் கோரிக்கை வைக்குங்கால் அல்லது ஒரு செய்தி சொல்ல முற்படுங்கால், அரசரின் மனநிலை, நேரம் அறிந்து அரசர் விரும்பும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If public wants to put a plead or wants convey a message to the king, he has to wait for the time and should know the mentality of the king, and then should convey that as if the king is interested to hear that.
MAHENDIRAN V
------------------
குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசரே விரும்பி கேட்டாலும், பயனுள்ள செய்திகளை சொல்வதில் தவறில்லை, ஆனால் பயனற்ற செய்திகளை கூறுதல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if a king is eager to ask message from public, one should  express only good ones but not any illy messages at any respect.
MAHENDIRAN V
------------------
குறள் 698:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசர் ஒருவருக்கு இளையவராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், அரசரின் பதவி அந்தஸ்த்தை கருதி அரசரை மதித்து நடந்து கொள்ளவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is very close relative to the king or older than the king, based on obeying his designation such person has to be behaving.
MAHENDIRAN V
------------------
குறள் 699:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தெளிந்த அறிவுடையோர், தாங்கள், அரசருக்கு பாத்தியப்பட்டோர் என்று சொல்லிக்கொண்டு அரசருக்கு விரும்பத்தகாத தீயச் செயல்களை செய்ய மாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who are cleaned intelligent and saying that they are very liable persons to the king would never act any illy activities against the king's willing.
MAHENDIRAN V
------------------
குறள் 700:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசருடன் வெகுகாலம் பழகிய நட்பில், அரசுக்கு உதவாத காரியங்களை, அரசருக்கும் கூட தெரியாமல் தன்னிச்சையாக ஒருவர் செயலாற்றுங்கால் அது அவருக்கு கேடு விளைவிக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is saying that he is a long time friend to the king for long time and doing some activities for the nation himself without knowledge to the king, he would meet out big misery.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS