அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை CHAPTER 63 THE FACTS OF MISERIES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை
CHAPTER 63 
THE FACTS OF MISERIES
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் வருங்கால் துவண்டு போகாது உள்ளுக்குள் சிரித்து மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள வேண்டும் துன்பத்தை எதிர்கொள்ளும் வலிமையான மருந்து அதுதான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
When one meets out misery, he has to make himself be pleasant intensively. This is the right remedy to give up the misery.
MAHENDIRAN V
------------------
குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெள்ளம்போல் கரைபுரண்டு துன்பம் வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனதிடம் வலிமையாய் இருப்பின் துன்பமே அஞ்சும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one strongly opposes the miseries that come to him like flood, such misery too would be afraid of him to near him.
MAHENDIRAN V
------------------
குறள் 623:
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் நெருங்குங்கால், துன்பத்திற்கே துன்பம் தரும் இயல்பே அறிவுடையவர்களின் செயல்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wisdom activity of one is that to give misery to the misery, if it nears to him.
MAHENDIRAN V
------------------
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பத்தையும் தாண்டி இன்பமாய் விடாமுயற்சி செய்யும் செயலுக்கு தடைகளையும் தாண்டி வண்டியை இழத்துச் செல்லும் எருதேச்சான்று.
வை.மகேந்திரன்

Explanation in English:
Bulls who skips the hurdles when they pull the cart is the right example to one to skipping the hurdles that come to one's life by a continual try.
MAHENDIRAN V
------------------
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தொடர் துன்பம் வரும் பொழுது தாங்கிக்கொள்ளும் மன உறுதியை கொண்டிருந்தால் வரும் துன்பம் துன்பப்பட்டுப்போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is being strong and tackling the continual miseries, those miseries would run away by meeting out misery from him.
MAHENDIRAN V
------------------
குறள் 626:
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில் மகிழ்ச்சியில் திளைத்து அதை காக்கத் தெரியாமல், வறுமை வரும்பொழுது கலங்குவதில் அர்த்தமில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Being happy infinitely without saving during having wealth a lot but worrying out and being saddened during poverty is meaningless.
MAHENDIRAN V
------------------
குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் என்பது எவ்வுயிர்க்கும் இயல்பு என்பதை அறிந்திட்டால், துன்பத்த்தின் கொடுமை பெரிதாக தெரியாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one realises that meeting out misery is nature to all living beings, the cruelty of misery would not be felt by one as a big one.
MAHENDIRAN V
------------------
குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இன்பத்தில் விருப்பம் இல்லாதோர் துன்பத்தை துயரமாக எண்ண மாட்டார்கள். ஆதலால் துன்பத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Those who don't bother about pleasance when they meet out happiness would not be worried out of misery too when it comes. So that they would not be afraid of misery.
MAHENDIRAN V
------------------
குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இன்பம் வரும் காலத்தில் அதை இனிது என்று அனுபவிக்க விரும்பாதோர் துன்பம் வரும் காலத்தில் அதை ஒரு பொருட்டாகாவே நினைக்கமாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
(This too is the same matter as previous lines) Those who are not interested to enjoying pleasance would not consider as a hard  when they meet out misery.
MAHENDIRAN V
------------------
குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பமும் தனக்கு ஒரு இன்பமே என்று கருதுபவர்களை பகைவரும் வியந்து பாராட்டுவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Enemies too would very much applaud ones who consider misery too is a kind of pleasance.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS