Monday, 1 November 2021

அதிகாரம் 15 பிறனில் விழையாமை Chapter 15 No desiring others' spouse (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 15
பிறனில் விழையாமை 

CHAPTER 15
NO DESIRING OTHERS' SPOUSE 📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by 
Mahendiran V Northpoigainallur)

📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்

விளக்கம்:
அடுத்தவர் மனைக்கு (கணவன்/மனைவி) ஆசைப்படுவோர் அறனுக்கு முரணானவர் என்பதை கற்றோர் அறிவர்.

Explanation in English:
The characteristic of desiring other's spouse is against the morality. Well versed literates would know it.
------------------------
குறள் 142:
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

விளக்கம்:
பிறர் மனைக்கு ஒழுக்கத்திற்கு முரணாக ஆசைப்படும் செயலைப் போல கொடிய பாவம் உலகில் வேறெதுவுமில்லை.

Explanation in English:
There is no as such a worst sin in the world as desiring on other's spouse immorally.
------------------------
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

விளக்கம்:
நம்பிக்கைக்குட்பட்டு அனுமதிக்கப்படுபவன் அனுமதித்தவனின் மனைவி மீது இச்சை கொள்வானானால், அவன் இறந்த உடலுக்கு சமம்.

Explanation in English:
If a person who is believed very much by another is desiring the another's wife in wrong way, such person is worse than dead body.
------------------------
குறள் 144:
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

விளக்கம்:
எத்தனைதான் உயர்வாய் இருந்து புகழ்பெற்றவராயிருந்தாலும் அவர் அடுத்தோர் மனையாளின் மேல் மோகம் கொண்டால் அவர் தன் தகுதி புகழ் அனைத்தும் மதிப்பற்று போகும்.

Explanation in English:
How far as one is prime and fame, if he wills to have other's spouse, his entire status is invalid.
------------------------
குறள் 145:
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

விளக்கம்:
எளிதான ஒன்று என்று எண்ணி பிறர் மனைவியின் மீது ஆசை கொள்வது தீர்க்க முடியாத பாவச்செயல்.

Explanation in English:
One who tries to have other's spouse by thinking that's an easy one will earn an unsoluable sin.

குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

விளக்கம்:
பிறர் மனை நோக்கி ஆசை கொள்வோர், பகை, பாவம், அச்சம் மற்றும் பழி ஆகிய இந்த நான்கிலிருந்து தப்பிக்கவே முடியாது.

Explanation in English:
One who wills to have other's spouse will never escape from four forms such as enemines, sin, fear and crime.
------------------------
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

விளக்கம்:
எச்சூழலிலும் பிறர் மனைக்கு இச்சை கொள்ளாதவரே நல்லொழுக்கத்துடன் வாழ்பவராகிறார்.

Explanation in English:
Living with good disciplines means that not to will other's spouse at any circumstance.
------------------------
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

விளக்கம்:
பிறர் மனை நோக்காத் தன்மை அறம் மட்டுமானதல்ல, மேன்மையான ஒழுக்கம் நிறைந்தது ஆகும்.

Explanation in English:
The stand of not willing other's spouse is not only virtuality but also an immense morality.
------------------------
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

விளக்கம்:
பிறர்மனை பால் விரல் கூட  படா எண்ணம் கொண்டோரே பயம் காட்டும் கடல்சூழ்ந்த இப்புவியில் வாழத் தகுதியுடையவர்.

Explanation in English:
Only the man who even doesn't desire to touch other's spouse is fully eligible to live in the earth covered by fearful oceans.
------------------------
குறள் 150:
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

விளக்கம்:
பிறருக்கு உபகாரம் செய்யாதாகினும் பரவாயில்லை, அது ஒரு பொருட்டு அல்ல. ஆனால் பிறர்மனை பால் கனவிலும் ஆசை கொள்ளக் கூடாது.

Explanation in English:
Even if one hasn't done even a bit betterment to others, that is not a matter at all. But he shouldn't even think to desire other's wife.
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

அதிகாரம் 14 ஒழுக்கம் உடைமை Chapter 14 Discipline/Morality (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 14
ஒழுக்கம் உடைமை
CHAPTER 14
Discipline/Morality
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-----------------------------
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

விளக்கம்:
ஒழுக்கம் ஒன்றே உலகில் உயர்வானது ஆகையால், ஒழுக்கம் உயிரிலும் மேலானதாகும்.

Explanation in English:
Since morality is the prime sense, it is greater than one's soul.
-------------------------------------
குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

விளக்கம்:
நல்லொழுக்கம் ஒன்றே வாழ்வில் என்றும் துணை நிற்குமாகையால், எந்த ஒரு கஷ்ட்ட நிலை ஏற்பட்டாலும் ஒழுக்க நெறி தவறாது வாழவேண்டும்.

Explanation in English:
Despite meeting any kind of difficulties, one should keep discipline as only such is the safeguard for one's life ever.
-------------------------------------
குறள் 133:
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

விளக்கம்:
ஒழுக்கத்துடன் வாழ்பவனே நல்லதொரு குடிமகன். இல்லேல், அவனது பிறப்பே தீமையானதாகும்.

Explanation in English:
One who is having good disciplines is a good citizen otherwise his birth means evil.
-------------------------------------
குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

விளக்கம்:
மறந்துபோன வேதங்களை கூட திரும்ப கற்றுக் கொண்டுவிடமுடியும் ஆனால் ஒழுக்கம் தவறிப்போய் வாழ்ந்தால், குடும்பகௌரவம் நற்பெயரை இழக்கும் நிலை ஏற்படும். மீட்டெடுக்க முடியாது.

Explanation in English:
Forgotten vedic too can be relearned but losing disciplines will spoil the goodwill of one's family status, cannot be retrieved.
-------------------------------------
குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

விளக்கம்:
எப்படி பொறாமை குணம் ஒருவனுக்கு செல்வத்தை கொண்டுவராதோ அது போல் தீய ஒழுக்கங்கள் ஒருவனின் வாழ்க்கையில் பெரிய இழப்பை ஏற்ப்படுத்தும்.

Explanation in English:
Jealousy will not bring wealth to one likewise indiscipline life will make a big loss to one.
-------------------------------------
குறள் 136:
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

விளக்கம்:
நன்கு கற்றறிந்தவர்கள், 'ஒழுக்கம் தவறினால் குடும்பத்தின் மதிப்பு கெடும்' என்பதை அறிவார்கள் ஆகையால், அறநெறி தவற மாட்டார்கள்.

Explanation in English:
Good men will not foul from disciplinary life as they know if they foul so, they would lose the honour of their family.
-------------------------------------
குறள் 137:
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

விளக்கம்:
நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வது ஒன்றே நல்வாழ்விற்கு வித்தாகும் இல்லேல் தீய வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Explanation in English:
Only way to get a fabulous life is, following good disciplines, failing such will lead to evil life.
-------------------------------------
குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

விளக்கம்:
நல்லொழுக்கங்கள் நன்மைக்கு காரணங்களாக அமையும். தீய ஒழுக்கத்துடனான வாழ்வு தீமைகளை மட்டுமே பெற்றுத்தரும்.

Explanation in English:
A fine virtuality followed in one's life will bring to the brightest life and one's Indisciplined life would cause evil manners.
-------------------------------------
குறள் 139:
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

விளக்கம்:
நல்ல ஒழுக்கமுள்ள மனிதன் தவறியும் கூட தீயவைகள் தரக்கூடிய வார்த்தைகளை உச்சரிக்க மாட்டான்.

Explanation in English:
A good moralitised man would never slip his tongue pronouncing illy words.
-------------------------------------
குறள் 140:
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

விளக்கம்:
பற்பல கற்றறிந்த சான்றோனாக இருந்தாலும், நல்லொழுக்கம் பேணுபவர்களிடம் பழாகாதவனாக அவன் இருந்தால், அவள் ஒரு முழு முட்டாளாவான்.

Explanation in English:
If one doesn't behave with good moralitised persons, even if he is literate by studying numberlss books, he is utter fool.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE