அதிகாரம் 24 புகழ்
CHAPTER 24 PRIDE
(Explanation in Tamil and English written by Mahendiran V)
தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
--------------------------
குறள் 231:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
விளக்கவுரை:
ஏழைகளுக்கு உதவுவதனால் கிடைக்கும் புகழை விட ஒரு மனிதனுக்கு பெரும் சம்பாதித்யம் ஏதுமில்லை
Explanation in English:
No any other earning is the best to one as he earns prides by helping poor people.
--------------------------
குறள் 232:
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்
விளக்கவுரை:
வறுமையில் இருப்போர்க்கு உதவுவதை கண்டு பிறர் புகழும் புகழ்ச்சியே முதன்மையான புகழ்.
Explanation in English:
The perfect pride is that others applaud one because of his doing immense help to people who are under poverty.
--------------------------
குறள் 233:
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
விளக்கவுரை:
ஒருவனின் நற்செயல்களால் கிடைக்கும் புகழே என்றும் நிலைத்து நிற்குமேயன்றி வேறெதுவும் இல்லை.
Explanation in English:
None would stably stand but the pride of one done by good activities.
--------------------------
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு
விளக்கவுரை:
இவ்வுலகம் தேவர்கள் முனிவர்களை கூட வாழ்த்தாது ஆனால் நற்செயல் புரிந்து புகழ்பெற்றவர்களை வாழ்த்தும்.
Explanation in English:
The world would no applaud even sages or saints but ones who get prides of his good acts.
--------------------------
குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
விளக்கவுரை:
அத்தனை துன்பத்திலும் கஷ்ட்டத்திலும் புகழை தாங்கி நிற்கும் தன்மை சாவிற்கு பிறகும் நிலைத்து நிற்கும்.
Explanation in English:
Retaining prides despite being infinite difficulties would ever stand even after death too.
--------------------------
குறள் 236:
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
விளக்கவுரை:
நற்செயல் புரிந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும். இல்லேல் வாழ வந்ததே அர்த்தமற்றதாகும்.
Explanation in English:
One should live with earning prides a lot by doing enormous betterments otherwise one's birth is meaningless.
--------------------------
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்
விளக்கவுரை:
புகழுடன் வாழ இயலாதவர் தன் இயலாமையை மறைத்து அதற்காக பிறரை இகழ்ந்து உரைப்பது சிறுமையாகும்.
Explanation in English:
It's meaningless what one who is not able to be granted prides because of his inability but accusing others instead of him.
--------------------------
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
விளக்கவுரை:
வாழ்வில் எஞ்சி நிற்பது புகழ் தான் என்றெண்ணி வாழ்வில் புகழ் பெற வாழ தவறுவது ஒரு பழியாகும்.
Explanation in English:
Failing being granted prides despite knowing that only pride remains ever is a crime.
--------------------------
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
விளக்கவுரை:
புகழ்பெற்று வாழ முயற்சிக்காதவரை சுமந்ததற்காக இந்த புவியே வெட்கி நிற்கும்.
Explanation in English:
The earth too would shy and lose its dignity for carrying ones who fail to live with prides of good activites.
--------------------------
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
விளக்கவுரை:
பழி/குற்றமில்லாமல் வாழ்பவரே வாழ்பவர்களாவார்கள். அது போல புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ லாயக்கற்றவர்களாவார்கள்.
Explanation in English:
Only the life of ones without crime is the best life likewise the life of ones without prides is the worst life.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------