Monday, 8 November 2021

அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

அதிகாரம் 20

பயனில சொல்லாமை
CHAPTER 20
TO AVOID SPEAKING USELESS MATTERS 

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன்.
(Explanation in Tamil and English is written by Mahendiran.V)

குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

விளக்கவுரை:
தேவையில்லாமல் பயனற்றவைகளை பேசுபவர் பலராலும் இகழப்படுவார்.

Explanation in English:
One who speaks unnecessarily like a loosey goosey would be criticised badly by society.
--------------------------------
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது

விளக்கவுரை:
பயனற்ற வார்த்தைகளை வளவளவென்று பேசுவது ஒருவருக்கு அறம் செய்யாதிருப்பதை விட தீமையானதாகும்.

Explanation in English:
Speaking unwanted words infront of many is more illy than being merely not doing moral activities.
--------------------------------
குறள் 193:
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

விளக்கவுரை:
ஒருவன் பயனற்ற ஒன்றை விவரித்து பேசுவதை வைத்தே அவன் அறநெறி தெரியாதவன் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Explanation in English:
One who speaks deeply about an useless affairs is known that he is against the man of Morality.
--------------------------------
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

விளக்கவுரை:
பலரிடத்திலும் பண்பில்லாத வார்த்தைகளை பேசுவது அவனுக்கும் அனைவருக்கும் தீமையையே கொண்டுவரும்.

Explanation in English:
Speaking immorally to others would bring only evil effects to him and all.
--------------------------------
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

விளக்கவுரை:
பயனற்ற விஷயங்களை நல்லோர் பேசினாலும் அவர்களது பெருமையும் புகழும் தாழ்ந்து போகும்.

Explanation in English:
Even if good men speak immorally, their prides and honour would descend.
--------------------------------
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

விளக்கவுரை:
பயனற்ற வார்த்தைகளால் வீண்பேச்சு பேசுபவர்கள் ஒரு மானிட பதரே அன்றி ஒழுக்கம் நிறைந்த மனிதராக இருக்கமுடியாது.

Explanation in English:
One who is arguing by unwanted words is a mere human body but not human ever.
--------------------------------
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

விளக்கவுரை:
சான்றோர் நற்கூற்றுகள் சொல்லாவிட்டால் கூட தவறில்லை. பயனற்ற அவச்சொற்களை உதிர்க்காமல் இருக்க வேண்டும்.

Explanation in English:
Honourable persons may be not speaking betterments but not to pronounce useless illy words.
--------------------------------
குறள் 198:
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

விளக்கவுரை:
அறிவில் சிறந்த ஆன்றோர் பெருமக்கள் ஒருபோதும் பெரும் பயன் இல்லாத வார்த்தைகளை பேசமாட்டார்கள்.

Explanation in English:
Well-versed intellectual experts would never speak evil caused words.
--------------------------------
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

விளக்கவுரை:
மயக்கத்திலிருந்து மீண்டிருந்தபோதிலும், கறையில்லா தெளிந்த அறிவுடையவர்கள் ஒரு போதும் கருத்தில்லா சொற்களை பேசமாட்டார்கள்.

Explanation in English:
Even if, pure literates persons retrieved from dizziness would never speak meaningless words.
--------------------------------
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

விளக்கவுரை:
பயன் தரக்கூடிய வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும். பயன் தராத சொற்களை பேசுதல் கூடாது.

Explanation in English:
One should speak only the matters that are useful to all. Useless matters must be avoided.
--------------------------------
Explanation in Tamil and English
written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)

Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE