அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்செயல் எது தீயச் செயல் எது என அறிந்து நாட்டு நலம் கருதி நற்செயல் புரிபவனால் தான் நாடு நல்வழியில் ஆளப்படும். வை.மகேந்திரன் Explanation in English: A country would be ruled well only by a king who knows to distinguish which is right and wrong acts for the sake of his nation. MAHENDIRAN V ------------------ குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை - த...