திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது - தெய்வப்புலவர் விளக்கம்: ஓ என் நெஞ்சே, அவர் நெஞ்சம் மட்டும் எனை நினையாது அவருக்கே துணையாய் நிற்கும்பொழுது, நீ மட்டும் எனை விலகி அவரையே நினைப்பது தான் ஏனோ? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, whereas his heart is out of my love, you would like to be with him as a safeguard, Is what you do think always about him right? - MAHENDIRAN V ------------------------ குற...