அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: கருத்து நிறைந்த நூல்களை படிக்காமல், கற்கிறேன் என்று கூறுவது, அரங்கு மற்றும் உபகரணம் இல்லாமல் பகடை விளையாடுவது போல் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he is learning but not studying books that contain wisdom, that is like the state of playing gambling without hall and instrument. - Mahendiran V --------------------------- குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. - தெய்வப்புலவர்...