அதிகாரம் 78 படைச்செருக்கு CHAPTER 78 THE PRIDES OF ARMY MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 78 படைச்செருக்கு CHAPTER 78 THE PRIDES OF ARMY MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் - தெய்வப்புலவர் விளக்கம்: என் தலைவனிடம் உங்கள் வீரத்தை காட்டாதீர்கள்; அப்படி காட்டிய பலர் ஆங்காங்கே கல் சிலையாய் நிற்கின்றனர் அறிவீரா?-என்று ஒரு வீரன் செருக்காய் முழங்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: Hey, Dont play with my king by your wrong game; there were many stood up as statues as they had played like you. A valient soldier has to make hurray like above to enemy. MAHENDIRAN V ------------------ குறள் 772: கான ம...